இந்திய உள்நாட்டு விமான பயண கட்டணங்கள் 12.82% அதிகரிப்பு – மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு!

0
இந்திய உள்நாட்டு விமான பயண கட்டணங்கள் 12.82% அதிகரிப்பு - மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு!
இந்திய உள்நாட்டு விமான பயண கட்டணங்கள் 12.82% அதிகரிப்பு - மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு!
இந்திய உள்நாட்டு விமான பயண கட்டணங்கள் 12.82% அதிகரிப்பு – மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு!

இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்திற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி விமான பயண கட்டணம் 9.83 சதவீதத்திலிருந்து 12.82 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என மத்திய விமான போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

விமான கட்டணம்:

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு தொற்று பரவலை தடுக்க உள்நாட்டு பயணிகள் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. இதனால் தொற்று பரவல் தற்போது குறைந்து வருகிறது. இதனையடுத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் விமான போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் MBA முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் விமான பயண கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 40 நிமிடங்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.2600 லிருந்து ரூ.2,900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 60 நிமிடங்கள் வரையிலான பயணத்திற்கு ரூ.3,300 லிருந்து ரூ.3,700 ஆக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 90 நிமிடங்கள் வரையிலான பயண நேரத்துக்கு குறைந்தபட்ச பயண கட்டணம் ரூ.4,500 ஆகவும், அதிகபட்சமாக 12.82 சதவீதம் உயர்த்தப்பட்டு, ரூ.13,200 ஆக உள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் எபிசோட் – வெண்பா வெளியிட்ட வீடியோ!

90 நிமிடங்கள் முதல் 120 நிமிடங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் தற்போது ரூ.4,700 லிருந்து ரூ.5,300ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 120-150 நிமிடங்களுக்கு பயண கட்டணம் 12.42 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 150-180 நிமிடங்கள் வரையிலான பயணக் கட்டணம் 7,400 ரூபாயிலிருந்து ரூ.8,300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 180 முதல் 210 நிமிடங்கள் வரையிலான விமான பயணத்திற்கு கட்டணம் ரூ.9,800 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான பயண கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரி கட்டணமும் அடங்கியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!