நாட்டின் முதல் தங்க ATM…பணம் மட்டுமின்றி இனி தங்கத்தையும் எடுக்கலாம்!!
நாட்டில் தற்போது 24 மணி நேரமும் ஏடிஎம்களில் பணத்தை பெறுவது போல் தங்க நாணயங்களையும் பெறும் வகையில் தங்க ஏடிஎம் ஒன்று ஹைதராபாத் மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை பார்ப்போம்.
தங்க ஏடிஎம்
நாடு தற்போது அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. இந்த டிஜிட்டல் யுகத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வகையில் தற்போது ஏடிஎம்களில் 24 மணி நேரமும் பணத்தை பெறுவது போல தங்க நாணயங்களை பெறலாம். அதாவது நாட்டின் முதல் தங்க ஏடிஎம் இயந்திரம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பேகம் பேட்டில் நிறுவப்பட்டுள்ளது.
கர்ப்பமானதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய நடிகை – இனி இவருக்கு பதில் இவர் தான்!
இந்த முதல் தங்க ஏடிஎம் பேகம்பேட்டில் உள்ள அசோக் ரகுபதி சேம்பர்ஸில் கோல்ட் சிக்கா என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இந்த தங்க ஏடிஎம் மூலமாக தங்களின் டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி தங்க நாணயங்களை பெறலாம். இதில் 99.99% தூய்மையான தங்க நாணயங்கள் கிடைக்கும். மேலும் இந்த தங்க ஏடிஎம் மூலமாக 0.5, 1, 2, 5, 10, 20, 50, 100 ஆகிய கிராம்களில் தங்க நாணயங்களை எடுக்க முடியும்.
இந்த திட்டம் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றால் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதே போன்று ஹைதராபாத்தில் குல்ஜர் ஹவுஸ், வாரங்கல், செகந்திராபாத் கரீம்நகர் ஆகிய இடங்களில் ஏடிஎம்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.