சீனாவை முந்தும் இந்தியாவின் பொருளாதாரம் – சர்வதேச நிதியம் கணிப்பு!!

0
சீனாவை முந்தும் இந்தியாவின் பொருளாதாரம் - சர்வதேச நிதியம் கணிப்பு!!
சீனாவை முந்தும் இந்தியாவின் பொருளாதாரம் - சர்வதேச நிதியம் கணிப்பு!!
சீனாவை முந்தும் இந்தியாவின் பொருளாதாரம் – சர்வதேச நிதியம் கணிப்பு!!

கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றால் அனைத்து உலக நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் பொருளாதாரம் சீனாவை விட இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச பொருளாதாரம்:

உலகம் முழுவதும் கடந்த வருடம் முதல் கொரோனா நோய்த்தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் அதிகமாக பாதிக்கப்பட்டது. மேலும் சிலர் தங்களது வாழ்வாதாரத்தையே தொலைத்து நின்றனர். தற்போது இந்தியாவில் அனைத்து இடங்களிலும் அனைத்து வகை தொழில்களும் மிக சிறப்பாக இயங்கி வருகிறது. இதன் காரணமாக பொருளாதாரம் சரிவில் இருந்து மீளத் தொடங்கியது.

TN Job “FB  Group” Join Now

மேலும் இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் அபார வளர்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். தற்போது இது குறித்து சர்வதேச நிதியம் ஓர் கருத்தை தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு 12.5% ஆக இருக்கும் என்று தெரிவித்தது. மேலும் வருகிற 2022ம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.9% வளர்ச்சி அடையும் என்றும் தெரிவித்தது.

ஊதியம், ஓய்வூதிய நிலுவைத் தொகை – உயர் நீதிமன்றம் கேள்வி!!

கொரோனா காலத்தில் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த சீனா இந்த ஆண்டில் அதன் பொருளாதாரத்தில் 8.6% உயரும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டில் சீனாவை விட இந்தியாவின் பொருளாதாரம் அபார வளர்ச்சி அடையும் என்று தெரிவித்தது. அதேபோல் மைனஸ் 3.3% வீழ்ச்சி கண்ட சர்வதேச பொருளாதாரம் இந்த ஆண்டு 6% அதிகரிக்கும். வருடாந்திர உலக பொருளாதாரம் மதிப்பீட்டில் இந்த ஆண்டில் உலக பொருளாதாரம் 6% மற்றும் அடுத்த ஆண்டு 4.4% வளர்ச்சி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here