இந்தியாவில் தீவிரமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 46,759 பேருக்கு தொற்று! 509 பேர் பலி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,759 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 509 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி பாதிப்புகளை அதிகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 46,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,26,49,947ஆக அதிகரித்துள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் – ஆகஸ்ட் 31 ல் வாக்காளர் பட்டியல் வெளியீடு!
இதுவரை நாடு முழுவதும் 61,22,08,542 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசிகள் நல்ல பலனை தந்துள்ளது. ஆனாலும் கடந்த மாதத்தை விட நடப்பு மாதம் தொற்றின் வீரியம் அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 509 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 4,37,370 ஆக உயர்ந்துள்ளது. நேற்றை விட இன்று உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை தடுக்க மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
TN Job “FB
Group” Join Now
அதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 31,374 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,18,52,802 ஆக அதிகரித்துள்ளது. மேலும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் விகிதம் 97.56% என்ற நிலையில் உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,59,775 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.10% ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.