இந்தியாவில் ஒரே நாளில் 25,166 பேருக்கு கொரோனா தொற்று – 437 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,166 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் ஒரே நாளில் 437 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமெடுத்து பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 25,166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,22,50,679 ஆக அதிகரித்துள்ளது. இந்த தொற்றை குறைக்கும் முயற்சியாக அனைத்து மாநிலங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 54,58,57,108 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
3 ஆண்டாக ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் இடமாற்றம் – தேர்தல் அதிகாரி உத்தரவு!
ஆனாலும் தொற்று முழுமையாக குறையவில்லை. உயிரிழப்புகளும் தொடர்கிறது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி நாடு முழுவதும் 437 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 4,32,079 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதனை தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 36,830 பேர் நேற்று ஒரே நாளில் குணமடைந்துள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3,14,48,754 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் 3,69,846 கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.15% ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.