நாடு முழுவதும் ஒரே நாளில் 38,079 பேருக்கு கொரோனா – 560 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. அதாவது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 38,079 பேருக்கு கொரோனா புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 560 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு
கொரோனா 2 ஆம் அலை பாதிப்பின் வடுவானது மெல்ல மறைய துவங்கியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்தியாவை தலைகீழாக புரட்டி போட்ட கொரோனா பேரலையால் ஒரு நாளைக்கு 4 லட்சம் மக்கள் புதிதாக பாதிக்கப்பட்டதுடன், தினசரி 4 ஆயிரம் பேர் மாண்டனர். இந்த 2 ஆம் அலை தாக்கத்தின் வீரியத்தை உணர்ந்த மாநில அரசுகள், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இவ்வகை கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா பரவல் சங்கிலியை கட்டுப்படுத்திய பல்வேறு மாநிலங்களில் தற்போது நோய் தொற்றானது வெகுவாக குறைந்து வருகிறது.
கண்ணம்மா தான் ஹேமாவின் அம்மா, உண்மையை உளறிய சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!
இதை தொடர்ந்து தற்போது மாநிலங்கள் தோறும் தளர்வுகள் அளிக்கப்பட்டு பொது மக்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதனிடையே கொரோனா 3 ஆம் அலைக்கான அச்சம் ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் மிகவும் கவனமாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், பலி விவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு ஆணை ரத்து? நீதிமன்றம் உத்தரவு!
அதன் படி, நேற்று (ஜூலை 16) ஒரு நாளில் 38,079 பேருக்கு புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,10,64,908 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 560 பேர் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,13,091 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றிலிருந்து 43,916 பேர் குணமடைந்துள்ளதால், மொத்த எண்ணிக்கை 3,02,27,792 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனவால் பாதிக்கப்பட்டு 4,24,025 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தவிர நாடு முழுவதும் இதுவரை 39,96,95,879 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.