நாடு முழுவதும் ஒரே நாளில் 37,154 பேருக்கு கொரோனா – 724 பேர் உயிரிழப்பு!

0
நாடு முழுவதும் ஒரே நாளில் 37,154 பேருக்கு கொரோனா - 724 பேர் உயிரிழப்பு!
நாடு முழுவதும் ஒரே நாளில் 37,154 பேருக்கு கொரோனா - 724 பேர் உயிரிழப்பு!
நாடு முழுவதும் ஒரே நாளில் 37,154 பேருக்கு கொரோனா – 724 பேர் உயிரிழப்பு!

கொரோனா 2ஆம் அலையை எதிர்கொண்டு வரும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37,154 பேருக்கு புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்த நிலையில் நேற்று (ஜூலை 11) ஒரு நாளில் 724 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை பாதிப்பானது கிட்டத்தட்ட 2 மாதங்களாக நீடித்து வருகிறது. அதாவது கடந்த ஏப்ரல், மே மாதம் என்ற அளவில் தீவிரமடைந்து வந்த கொரோனா தொற்றால் ஒரு நாளைக்கு 4 லட்சம் பேர் வரை நோய் பாதிப்புக்கு உள்ளானார்கள். அதே நேரத்தில் எதிர்பாராத அளவுக்கு பலி எண்ணிக்கையும் 4 ஆயிரமாக பதிவு செய்யப்பட்டு வந்தது. அதனால் நோய் தடுப்பு கட்டுப்பாடுகளாக ஏறத்தாழ 2 மாதங்கள் வரை அனைத்து மாநிலங்களுக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு, தற்போது நோய் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர்கள் தினசரி பள்ளிக்கு வருவது குறித்து புகார் – பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை!!

எனினும் நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பாதிப்பானது முற்றிலுமாக குறையவில்லை. இதற்கிடையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 724 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், பலியானவர்கள், சிகிச்சை பெறுபவர் மற்றும் இறப்பு எண்ணிக்கை குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில், நேற்று (ஜூலை 11) ஒரு நாளில் புதிதாக 37,154 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,08,74,376 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 724 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 4,08,764 ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றில் இருந்து ஒரு நாளில் 39,649 பேர் குணமடைந்துள்ள நிலையில், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,00,14,713 ஆக அதிகரித்துள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்டு இதுவரை 4,50,899 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 37,73,52,501 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here