இந்தியாவில் ஒரே நாளில் 80,834 பேருக்கு கொரோனா தொற்று – 3,303 பேர் பலி!!
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 1 லட்சத்திற்கும் குறைவாக கண்டறியப்பட்டு வருவதை தொடர்ந்து நேற்றும்(ஜூன் 12) பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்திற்கு குறைவாக கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த மே மாதத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்து 1 லட்சத்திற்கும் கீழ் காணப்பட்டு வருகிறது. இந்த தகவல் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் உயிரிழப்பு விகிதம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பது சற்று வேதனை அடைய செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80,834 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் ஏற்பட்ட மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,94,39,989 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் தொற்றால் 3,303 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,70,384 ஐ எட்டியுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 1,32,062 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கல்!
இதன் காரணமாக நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,80,43,446 ஆக அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் 10,26,159 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த 24 மணி நேர நிலவரப்படி நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 25,31,95,048 ஆக அதிகரித்துள்ளது.