இந்திய நிறுவனங்களில் 7.6% ஊதிய உயர்வு வழங்கப்படும் – ஆய்வு முடிவில் தகவல்!!

0
இந்திய நிறுவனங்களில் 7.6% ஊதிய உயர்வு வழங்கப்படும் - ஆய்வு முடிவில் தகவல்!!
இந்திய நிறுவனங்களில் 7.6% ஊதிய உயர்வு வழங்கப்படும் - ஆய்வு முடிவில் தகவல்!!
இந்திய நிறுவனங்களில் 7.6% ஊதிய உயர்வு வழங்கப்படும் – ஆய்வு முடிவில் தகவல்!!

2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்கள் அதிகபட்சமாக 7.6% ஊதிய உயர்வு வழங்கும் என மைக்கேல் பேஜ் டேலண்ட் டிரெண்ட் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு:

இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்கள் பல மாதங்களாக மூடப்பட்டன. இதன் காரணமாக பலர் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகியது, பல நிறுவனங்களில் சம்பளம் வழங்கப்படவில்லை, சில நிறுவனங்களில் ஊதியமின்றி கட்டாய விடுப்பு வழங்கப்பட்டது. பலரது பொருளாதார நிலை கேள்விக்குறியானது, தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் பல நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

தமிழகத்தில் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வி இயக்குனர் விளக்கம்!!

பலர் பழைய நிலைமையை அடைய இரவு, பகல் பாராமல் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். எனவே இந்த ஆண்டு பல துறைகளில் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு இருக்கும் என மைக்கேல் பேஜ் டேலண்ட் டிரெண்ட் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வானது சுமார் 660 நிறுவனங்களின் 4,600 பணியாளர்களிடம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரம், மருத்துவம் ஆகிய துறைகளில் அதிகப்படியான சம்பள உயர்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு Ph.D கட்டாயம் – யுஜிசி உத்தரவு!!

அதிகப்படியான சம்பள உயர்வு வழங்கப்படும் நிறுவனங்கள்:

1. கொரோனா காரணமாக மருத்துவ துறை தீவிரமாக பணியாற்றி வருவதால் அத்துறையில் அதிகப்படியான சம்பள உயர்வு இருக்கும்.

2.வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் (FMCG) துறையில் 7.6 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

3.ஆன்லைன் மின்னணு துறையில் 7.5% வளர்ச்சி உள்ளது.

கிராமப்புற மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு – வருடந்தோறும் ரூ.1000 உதவித்தொகை!!

4. ஐ.டி துறையில் 7.3% வறட்சி உள்ளது.

5. வங்கி மற்றும் நிதி சேவை துறையில் 6.8% வளர்ச்சி உள்ளது.

6. புரோஃபெசனல் சேவைகள் பிரிவில் 6.7 சதவீதம் வளர்ச்சி உள்ளது.

7. சில்லறை வர்த்தகத் துறையில் 6.1 சதவீதம் வளர்ச்சி உள்ளது.

8. போக்குவரத்து மற்றும் விநியோகத் துறையில் 6 சதவீதம் வளர்ச்சி உள்ளது.

9. உற்பத்தித் துறையில் 5.9 சதவீதம் வளர்ச்சியும் உள்ளது.

10. ரியல் எஸ்டேட் துறையில் 5.3 சதவீதம் வளர்ச்சி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here