ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா – ரசிகர்கள் ஆரவாரம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி:
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி துவங்க இருக்கும் நிலையில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியுடன் மோத இருக்கிறது. இந்நிலையில், இதற்கு முதற்கட்டமாக இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் 3 ஒருநாள் போட்டியில் மோத திட்டமிட்டுள்ளது. அதன்படி, நேற்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ரூ.6000 மானியம் எப்போது கிடைக்கும்? – வெளியான முக்கிய அறிவிப்பு!
ஏற்கனவே, இந்தியா டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் முதலிடத்தில் இருக்கும் நிலையில் தற்போது முதல் ஒருநாள் போட்டியிலும் வென்றுள்ளது. அதாவது, ருதுராஜ் கெயிக்வாட் 71 ரன்களும், சுப்மன் கில் 74 ரன்களும், கே எல் ராகுல் 58 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 50 ரன்களும் குவித்துள்ளனர். இதன் பின்னர், நாளை மற்றும் செப். 27 ஆம் தேதியில் அடுத்தடுத்த ஒரு நாள் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்தியா வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்ப்பார்புடன் உள்ளனர்.