T20 உலகக்கோப்பை போட்டி – ஒரே குழுவில் இடம்பிடித்த இந்தியா, பாகிஸ்தான்!

0
T20 உலகக்கோப்பை போட்டி - ஒரே குழுவில் இடம்பிடித்த இந்தியா, பாகிஸ்தான்!
T20 உலகக்கோப்பை போட்டி - ஒரே குழுவில் இடம்பிடித்த இந்தியா, பாகிஸ்தான்!
T20 உலகக்கோப்பை போட்டி – ஒரே குழுவில் இடம்பிடித்த இந்தியா, பாகிஸ்தான்!

கிரிக்கெட் உலகில் மிக முக்கியமாக கருதப்படும் T20 உலகக்கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போட்டித்தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளது.

T20 உலகக்கோப்பை:

கிரிக்கெட் உலகில் பலரும் ஆவலோடு எதிர்பார்த்து வரும் 20 ஓவர்களை கொண்ட ‘T20 உலகக்கோப்பை’ போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தியாவில் நடைபெற இருந்த இந்த போட்டிகள் அனைத்தும் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான மேற்கு இந்திய தீவுகள் அணி குழு 1 இல் இடம்பெற்றுள்ளது.

WhatsApp Web பயனர்கள் கவனத்திற்கு – முக்கிய அம்சங்கள்!!

இதில் குறிப்பாக இந்தியாவும், அண்டை நாடான பாகிஸ்தானும் 2021 ஆம் ஆண்டின் T20 உலகக் கோப்பை போட்டிக்கு ஒரே குழுவில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அதாவது தற்போது நடைபெற இருக்கும் T20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் குழு 2 இல் இடம்பிடித்துள்ளது. இந்த 2 அணிகள் தவிர குரூப் 2 ல் உள்ள மற்ற இரண்டு அணிகளில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் இடம்பிடித்துள்ளது. இந்த இரு அணிகளும் கடைசியாக 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக கோப்பையில் இணைந்து விளையாடியது.

TN Job “FB  Group” Join Now

இது தவிர குழு A இல் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் நமீபியா உள்ளிட்ட 4 அணிகளும் குழு B இல் பங்களாதேஷ், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா மற்றும் ஓமன் உள்ளிட்ட அணிகளும் இடம் பெற்றுள்ளன. மேலும் நடப்பு சாம்பியன்களான வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் குழு 1 இல் இடம்பிடித்துள்ளன. இது தொடர்பாக ICCயின் செயல் தலைமை நிர்வாகி ஜெஃப் அலார்டிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ICC ஆண்கள் T 20 உலகக் கோப்பை போட்டிக்கான குழுக்களை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் சில சிறந்த மேட்ச் அப்களை குழுக்கள் வழங்கும்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக 2016 T20 உலகக் கோப்பையை இந்தியா நடத்தியது. இதனிடையே மீண்டுமாக இந்தியாவில் நடைபெற இருந்த 2021 T 20 உலகக்கோப்பை கொரோனா காரணமாக மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தத IPL போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வைத்து நடத்த ICC திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here