வேலை தேடும் சென்னைவாசிகளுக்கு ஹாப்பி நியூஸ் – வங்கி வேலைக்கான சூப்பர் அறிவிப்பு!

0
வேலை தேடும் சென்னைவாசிகளுக்கு ஹாப்பி நியூஸ் - வங்கி வேலைக்கான சூப்பர் அறிவிப்பு!
வேலை தேடும் சென்னைவாசிகளுக்கு ஹாப்பி நியூஸ் - வங்கி வேலைக்கான சூப்பர் அறிவிப்பு!
வேலை தேடும் சென்னைவாசிகளுக்கு ஹாப்பி நியூஸ் – வங்கி வேலைக்கான சூப்பர் அறிவிப்பு!

சென்னையை சேர்ந்த IndBank ஆனது Field Staff மற்றும் இதர பணியில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சென்னையில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 26, 2022 ஆகும். தகுதியான விண்ணப்பதாரர்கள் IndBank இன் அதிகாரப்பூர்வ இணையதளமான indbankonline.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

சூப்பரான அறிவிப்பு:

நாடு முழுவதும் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் சென்னையை சேர்ந்த IndBank யில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. இந்த ஆட்சேர்ப்பு இயக்கமானது நிறுவனத்தில் உள்ள 73 பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதன்படி, அக்கவுண்ட் ஓப்பனிங் டிப்பார்ட்மென்ட்(1) பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் NISM DP, SORM சான்றிதழுடன் பட்டப்படிப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், அக்கவுண்ட் ஓப்பனிங்(4) பணிக்கு விண்ணப்பிக்க டிப்பார்ட்மென்டில் டிமேட் மற்றும் டிரேடிங் A/C ஆகியவற்றில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – வருவாய்த்துறை முக்கிய அறிவிப்பு!

DP ஊழியர்கள்(2) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், NISM DP சான்றிதழுடன் ஏதேனும் பட்டப்படிப்பு மற்றும் DP செயல்பாடுகளில் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஹெல்ப் டெஸ்க் ஊழியர்கள்(5) பதவிக்கு, விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருந்தால் போதுமானது. இதையடுத்து Dealer- for Stock Broking Terminals(8) பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருந்தால் போதுமானது. இருப்பினும், B.Com பட்டதாரியாக இருந்தால் சிறப்பு கவனம் செலுத்தப்படும். மேலும் ஆராய்ச்சி ஆய்வாளர் பதவிக்கு(1) , விண்ணப்பதாரர் நிதியில் MBA அல்லது அதற்கு இணையான முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் NISM – ஆராய்ச்சி ஆய்வாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்கிரீனிங் கமிட்டி முதலில் அனைத்து விண்ணப்பங்களையும் மதிப்பாய்வு செய்யும், பின்னர் நேர்காணல் மற்றும் இறுதித் தேர்வு நிறுவனத்தின் குழுவால் மேற்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள், இப்பதவிக்கான விண்ணப்பப்படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை, தேவையான ஆவணங்களுடன் இணைத்து, “Head Administration No 480, 1st Floor Khivraj Complex I, Anna Salai, Nandanam, Chennai-35” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இல்லையெனில், விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மேலும், இது குறித்த விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!