IND vs SA: இந்திய அணி சூப்பர் பேட்டிங்.. வெற்றி யாருக்கு??
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடி வருகின்றன. பட்டியலில் முதல் இரு இடத்திலும், மேலும் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகளாவும் இவை இருப்பதால் இந்த போட்டியின் முடிவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனாலும் வெற்றியை நீட்டிக்கும் முனைப்பில், இரு அணிகளும் இருப்பதால் போட்டி சுவாரசியமாக இருக்கும்.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது. கேப்டன் ரோஹித் மற்றும் கில் இருவரையும் அதிரடியாக விருளையாடுவதால், ஸ்கோர் துவக்கத்திலேயே ஜெட் வேகத்தில் எகிறி வருகிறது. இதே பாணியில் ஆட்டினாள் இந்திய அணி 400 ரன்கள் வரை சென்று விடும்.
இரு அணிகள்:
- இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா (C), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (WK), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
- தென்னாப்பிரிக்கா (விளையாடும் லெவன்): குயின்டன் டி காக்(WK), டெம்பா பவுமா(C), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி