IND vs NZ டெஸ்ட் தொடர் – 5 ஸ்பின்னர்களுடன் கூடிய நியூஸிலாந்து அணி அறிவிப்பு! 

0
IND vs NZ டெஸ்ட் தொடர் - 5 ஸ்பின்னர்களுடன் கூடிய நியூஸிலாந்து அணி அறிவிப்பு! 
IND vs NZ டெஸ்ட் தொடர் - 5 ஸ்பின்னர்களுடன் கூடிய நியூஸிலாந்து அணி அறிவிப்பு! 

IND vs NZ டெஸ்ட் தொடர் – 5 ஸ்பின்னர்களுடன் கூடிய நியூஸிலாந்து அணி அறிவிப்பு! 

இந்தியா- நியூஸிலாந்து அணிகள் தொடரில் விளையாட உள்ளன.  இதற்கு சுழற்பந்து வீச்சை மையமாக கொண்ட நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்:

இந்தியாவில் நடைபெற வேண்டிய ஐபிஎல் தொடர் கொரோனா தொற்றின் காரணத்தினால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டு கடந்த மாதத்தில் நடந்து முடிந்தது. அதில் டோனி தலைமையிலான சென்னை அணி 4வது முறையாக கோப்பை வென்றது. தற்போது T20 ஆண்கள் உலக கோப்பை தொடர் அமீரகம் மற்றும் ஓமன் ஆடுகளங்களில் தற்போது நடந்து வருகிறது. இதில் பி பிரிவில் உள்ள இந்திய அணி 3 போட்டிகளுக்கு ஒன்றில் மட்டுமே வென்று பரிதாப நிலையில் உள்ளது.

இது நாள் வரை, உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானிடம் வீழ்ந்திடாத இந்திய அணி இந்த முறை தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கதாகும். எஞ்சியுள்ள இரு ஆட்டங்களையும் பெரிய ரன் ரேட்டில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும். இதனால் எஞ்சியுள்ள ஆட்டங்களில் வாழ்வா-சாவா போராட்டத்தில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்த தொடர் முடிந்த உடன் இந்திய உள்நாட்டு போட்டி அட்டவணை படி, நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

3 T20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதாக அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. T20 போட்டிகள் நவம்பர் மாதத்தின் 17, 19, 21 ஆகிய தினங்களிலும், டெஸ்ட் போட்டிகள் நவம்பர் 25 முதலும் தொடங்க உள்ளது. அதற்கான டெஸ்ட் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சிற்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதனால் நந்த அணியில் 3 பிரதான சுழற்பந்து வீச்சாளர்களுடன் மேலும் 2 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அணியில் சீனியர் வீரர்களான பவுல்ட், காலின் டி கிராண்ட்ஹோம் போன்றோர் தொடர்ச்சியாக 60 நாட்களுக்கும் மேலாக கடின பயிற்சியிலும், போட்டியிலும் உள்ளதால் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தலைமை பயிற்சியாளர் அறிவித்து உள்ளார்.

நியூசிலாந்து டெஸ்ட் அணி: கேன் வில்லியம்சன் (c), டாம் பிளன்டல் (wk), டிவோன் கான்வே, கைல் ஜேமிசன், டாம் லதாம், ஹென்றி நிக்கோல்ஸ், அஜாஸ் படேல், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், வில் சோமர்வில்லி, டிம் சவுத்தி, ரோஸ் வில் யங், நீல் வாக்னர்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!