IND vs ENG 4வது டெஸ்ட் – இந்திய அணியில் அஸ்வின், சூர்யகுமார் யாதவ்? 

0
IND vs ENG 4வது டெஸ்ட் - இந்திய அணியில் அஸ்வின், சூர்யகுமார் யாதவ்
IND vs ENG 4வது டெஸ்ட் - இந்திய அணியில் அஸ்வின், சூர்யகுமார் யாதவ்

IND vs ENG 4வது டெஸ்ட் – இந்திய அணியில் அஸ்வின், சூர்யகுமார் யாதவ்? 

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் தோல்வி எதிரொலியாக இந்திய அணியில் அஸ்வின், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சேர்க்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி:

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் 1-1 என தொடர் சமனில் உள்ளது. முதல் போட்டி டிராவில் முடிந்தது. 2வது போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியும், 3வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது.

Tokyo Paralympics 2020 ஈட்டி எறிதல் – தங்கம் வென்றார் இந்திய வீரர் சுமித் ஆன்டில்!

முன்னதாக 2வது டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல் பலனும் கிட்டியது. ஆனால் இந்திய அணியில் மாற்றம் நிகழுமா என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்த நிலையில் வெற்றி கூட்டணியை உடைக்க விரும்பாமல் இந்திய அணி மாற்றமின்றி களம் கண்டது. ஆனால் முதல் இன்னிங்சில் 78 ரன்களுக்கு சுருண்டு விட்டது. மேலும் இங்கிலாந்து அணி 432 ரன்கள் குவித்தது. பேட்டிங் மற்றும் பௌலிங் ஆகிய இரண்டிலும் இந்திய அணி மிகவும் சொதப்பலாகவே ஆடியது.

IPL 2021 : வாஷிங்டன் சுந்தர் விலகல் – புதிய வீரரை தேர்வு செய்த RCB அணி!

இதனால் அடுத்து நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கும் என நம்பப்படுகிறது. முன்னதாக 3வது டெஸ்ட் போட்டியிலேயே ஜடேஜாவிற்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா தான் களம் கண்டார். 2 விக்கெட் வீழ்த்திய அவர் இரண்டு இன்னிங்க்ஸையும் சேர்த்து 34 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் அஸ்வின் சேர்க்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs ENG 4வது ஓவல் டெஸ்ட் – இங்கிலாந்து அணி அறிவிப்பு, சாம் கரனுக்கு குட் பை?

அதே போல் அணியின் பேட்டிங் விமர்சனத்திற்கு உள்ளானதால், சூர்யகுமார் யாதவ் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் அணியில் சேர்க்கப்படுவர் எனவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பேட்டிங் ஆர்டரில் மாற்றம் ஏற்பட்டால் புஜாராவின் இடம் கேள்வி குறியாகத்தான் இருக்கும். இங்கிலாந்து அணி 4வது டெஸ்ட் போட்டிக்கான வீரர் பட்டியலை அறிவித்த நிலையில் இந்திய அணி எப்போது வீரர்களின் பட்டியலை வெளியிடும் என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளது. இந்த 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் செப் 02 முதல் 06ம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!