IND vs ENG 3வது டெஸ்ட் போட்டி இன்று துவக்கம் – உத்தேச 11 அணி & பிட்ச் ரிப்போர்ட்!

0
IND vs ENG 3வது டெஸ்ட் போட்டி இன்று துவக்கம் - உத்தேச 11 அணி & பிட்ச் ரிப்போர்ட்!
IND vs ENG 3வது டெஸ்ட் போட்டி இன்று துவக்கம் - உத்தேச 11 அணி & பிட்ச் ரிப்போர்ட்!
IND vs ENG 3வது டெஸ்ட் போட்டி இன்று துவக்கம் – உத்தேச 11 அணி & பிட்ச் ரிப்போர்ட்!

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது. இந்திய அணியில் ஜடேஜாவிற்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்படலாம் என தகவல்கள் வெளியாக நிலையில், கடந்த போட்டியில் பங்கேற்ற அதே வெற்றி கூட்டணி தொடரும் என கூறப்படுகிறது.

டெஸ்ட் போட்டி:

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முன்னேறுவதற்கு இத்தொடரை கைப்பற்ற வேண்டியது அவசியம். இதனால் இந்திய அணி புது உத்வேகத்துடன் களமிறங்கி உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் கடைசி நாள் ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது. எனவே போட்டி டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்ட நிலையில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டதால் 2 புள்ளிகள் அபராதமாக திரும்ப பெறப்பட்டது.

IND vs ENG 3வது டெஸ்ட் Live Updates – டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!

2வது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறிய நிலையில் பவுலர்கள் சிறப்பாக ஆட்டத்தை மாற்றினர். முஹமது ஷமி, பும்ராஹ் பேட்டிங்கில் இங்கிலாந்து அணி பவுலர்களை திணறடித்தனர். பந்துவீச்சில் சிராஜ், பும்ராஹ் அசத்த இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ள நிலையில் தொடரை வெல்ல இரு அணிகளுக்கும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இன்றைய போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு போட்டி துவங்குகிறது.

பார்வதியை மாட்டிவிட நினைக்கும் அர்ச்சனா, பின் பக்கம் வந்து காப்பாற்றும் சந்தியா மற்றும் செந்தில் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் களமிறங்க உள்ளார். மேலும் காயத்தால் அவதிப்படும் மார்க் வுட் விலகி உள்ளது சற்று பின்னடைவை ஏற்படுத்தும். மறுபுறம் இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என கூறப்படுகிறது. கேப்டன் விராட் கோஹ்லி எப்பொழுதும் வெற்றி கூட்டணியை மாற்றுவதை விரும்ப மாட்டார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதனால் 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமே.

போட்டி நடைபெற உள்ள லீட்ஸ் மைதானத்தில் 18 முதல் 22 டிகிரி செல்சியஸ் வெப்பம் நீடிக்கும் என தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால் மழைக்கு வாய்ப்பில்லை. மேலும் இந்த மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இதனால் இந்திய அணியில் 4 சீம் பவுலர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளரை களமிறக்க கேப்டன் விராட் கோஹ்லி திட்டமிட்டு உள்ளார்.

வேலைக்கு செல்ல போவதாக செழியனிடம் சொல்லும் ஜெனி, ராதிகாவிடம் வருத்தமாக பேசி நடிக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

உத்தேச 11 அணி:

இங்கிலாந்து – ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீட், டேவிட் மலன், ஜோ ரூட், ஜானி பெயர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் (wk), மொயீன் அலி, சாம் கர்ரன், ஒல்லி ராபின்சன், சாகிப் மஹ்மூத் / கிரேக் ஓவர்டன், ஜேம்ஸ் ஆண்டர்சன்

இந்தியா – ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோஹ்லி, அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!