IND vs ENG 3வது டெஸ்ட் – இங்கிலாந்து அணி அபார வெற்றி!! 

0
IND vs ENG 3வது டெஸ்ட் - இங்கிலாந்து அணி அபார வெற்றி!! 
IND vs ENG 3வது டெஸ்ட் - இங்கிலாந்து அணி அபார வெற்றி!! 

IND vs ENG 3வது டெஸ்ட் – இங்கிலாந்து அணி அபார வெற்றி!! 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

IND vs ENG 3வது டெஸ்ட்:

இந்தியா அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்களில் இமாலய வெற்றி பெற்று அசத்தியது. இதனால் இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்திய அணி மாற்றமின்றி களமிறங்கியது.

14 பந்துகளில் அரைசதம், ருத்ர தாண்டவம் ஆடிய ஆண்ட்ரே ரசல் – IPL முன்னோட்ட விளாசல்!

தற்போது லீட்ச்சில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் இங்கிலாந்து பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி 78 ரன்களுக்கு முதல் இன்னிங்ய்சில் முடங்கியது. பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸை துவக்கிய இங்கிலாந்து அணி 432 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. தனது 2வது இன்னிங்க்ஸை 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடங்கிய இந்திய அணி, நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்து இருந்தது.

அஸ்வினுக்கு அணியில் இடம் இல்லாததற்கு இதுவே காரணம் – ஜாஹிர் கான் வெளிப்படையான கருத்து!

நான்காம் ஆட்டம் இன்று துவங்கிய நிலையில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் தங்களின் விக்கெட்டுகளை தாரை வார்த்தனர். நான்காம் நாள் தொடங்கியதில் இருந்து இந்திய அணி மேற்கொண்டு 63 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. முடிவில், இந்திய அணி 99.3 ஓவர்களில் 278 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!