IND vs ENG 3வது டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து அணி அறிவிப்பு! களமிறங்கும் டேவிட் மாலன்!

0
IND vs ENG 3வது டெஸ்ட் போட்டி - இங்கிலாந்து அணி அறிவிப்பு! களமிறங்கும் டேவிட் மாலன்!
IND vs ENG 3வது டெஸ்ட் போட்டி - இங்கிலாந்து அணி அறிவிப்பு! களமிறங்கும் டேவிட் மாலன்!

IND vs ENG 3வது டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து அணி அறிவிப்பு! களமிறங்கும் டேவிட் மாலன்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணியில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

IND vs ENG 3வது டெஸ்ட் போட்டி:

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாட்டிங்காமில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்த பொழுது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது.

கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்!

அதன் பின்னர் லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் முதல் இன்னிங்சில் இந்திய 364 ரங்களும், இங்கிலாந்து 391 ரங்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி சற்று தடுமாறிய சமயத்தில் 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாமி-பும்ராஹ் கூட்டணி அணியை தூக்கி நிறுத்தியது. இதனால் இந்திய அணி 298/8 என்ற வலுவான நிலையை அடைந்தது டிக்ளேர் செய்தது.

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி – முதல்வர் நாளை அறிவிப்பு!

பின்னர் 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 120 ரங்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டர் மோசமாக இருப்பதனால் அந்த தோல்வி ஏற்பட்டது என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வரும் ஆகஸ்ட் 25-29 தேதிகளில் நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. T20 போட்டி தரவரிசையில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் டேவிட் மலான் தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக இங்கிலாந்து பேட்டிங் வரிசை சற்று வலு பெற்றதாக காணப்படுகிறது.

இங்கிலாந்து அணி வீரர்கள் விபரம் :

ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர் (wkt), சாம் குர்ரான், ஹசீப் ஹமீத், டான் லாரன்ஸ், சாகிப் மஹ்மூத், டேவிட் மாலன், கிரேக் ஓவர்டன், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், மார்க் வூட்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!