IND vs ENG 3வது டெஸ்ட் – இந்திய அணியில் அஷ்வினுக்கு இடம்? உத்தேச 11 அணி!

0
IND vs ENG 3வது டெஸ்ட் - இந்திய அணியில் அஷ்வினுக்கு இடம் உத்தேச 11 அணி!
IND vs ENG 3வது டெஸ்ட் - இந்திய அணியில் அஷ்வினுக்கு இடம் உத்தேச 11 அணி!
IND vs ENG 3வது டெஸ்ட் – இந்திய அணியில் அஷ்வினுக்கு இடம்? உத்தேச 11 அணி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் ஏற்படுமா எனவும் ரவிச்சந்தர் அஷ்வின் இடம் பெறுவாரா என்று ரசிகர்களிடம் தற்போது எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.

IND vs ENG 3வது Test 2021 – இந்திய அணி:

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாட்டிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போட்டியில் இந்திய அணியின் கை ஓங்கி இருந்தது.

தமிழகம் முழுவதும் கிராமங்களுக்கு மினி பஸ் சேவைகள் – அமைச்சர் அறிவிப்பு!

அதன் பின்னர் லண்டன் லார்ட்ஸில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று அசத்தியது. அதன் முதல் இன்னிங்சில் இந்தியா 364 ரன்களும், இங்கிலாந்து 391 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஷமி-பும்ராஹ் கூட்டணியின் உதவியுடன் இந்திய அணி நிர்ணயித்த 271 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 120 ரன்களிலேயே சுருண்டு படு தோல்வி அடைந்தது.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் 1000 ரூபாய் பரிசுத்தொகை – முதல்வர் அறிவிப்பு!

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டமே தோல்விக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு 3வது டெஸ்ட் போட்டிக்கான புதிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. T20 போட்டி தரவரிசையில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் டேவிட் மலான் அணியுடன் இணைந்திருப்பது கூடுதல் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. அதேபோல் இந்திய அணியில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக ஆல்-ரவுண்டர் ரவிச்சந்தர் அஸ்வின் அணியில் சேர்க்கப்படுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆனால், இந்திய கேப்டன் விராட் கோஹ்லி தற்போது உள்ள அணியை மாற்ற விருப்பமில்லை என கூறியதாக தகவல்கள் வெளியாகிறது. முன்னாள் கேப்டன் டோனி பாணியில் கோஹ்லி எப்போதும் வெற்றி கூட்டணியை உடைக்க விரும்ப மாட்டார் என்பதனால் இந்திய அணி மாற்றமின்றியே களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் 25 – 29 வரை நடைபெறவுள்ளது. லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.

இந்திய உத்தேச லெவன் அணி :

ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (C), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட (WK), ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!