IND vs ENG 3வது டெஸ்ட் – இந்திய அணியில் ஜடேஜாவிற்கு பதில் அஷ்வின்?

0
IND vs ENG 3வது டெஸ்ட் இந்திய அணியில் ஜடேஜாவிற்கு பதில் அஷ்வின்
IND vs ENG 3வது டெஸ்ட் இந்திய அணியில் ஜடேஜாவிற்கு பதில் அஷ்வின்

IND vs ENG 3வது டெஸ்ட் – இந்திய அணியில் ஜடேஜாவிற்கு பதில் அஷ்வின்?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாததினால், ரவிச்சந்தர் அஷ்வினுக்கு இடம் கிடைக்கும் என ரசிகர்களிடம் தற்போது எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.

IND vs ENG 3வது Test 2021 – இந்திய அணி:

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதின் காரணத்தால் ஆட்டம் டிராவில் முடிக்கப்பட்டது.

மெஸ்ஸி கண்ணீரை துடைத்து போட்ட TISSUE பேப்பர் – 7.43 கோடி ரூபாய்க்கு ஏலம்!

பின்னர் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 364 ரன்களும், இங்கிலாந்து 391 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஷமி-பும்ராஹ் கூட்டணியின் அசத்தலான ஆட்டத்தினால் இந்திய அணி 298 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின் இந்தியா நிர்ணயித்த 271 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 120 ரன்களிலேயே இங்கிலாந்து ஆட்டமிழந்தது.

அரசு வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க வாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இதனால் இங்கிலாந்து அணியில் T20 போட்டி தரவரிசையில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் டேவிட் மலான் அணியுடன் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் இந்திய அணியில் ஏதேனும் மாற்றங்கள் நிகழுமா என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் விளையாடிய ஜடேஜா பெரிய அளவில் சோபிக்கவில்லை என்பதனால் மற்றொரு ஆல்-ரவுண்டர் ரவிச்சந்தர் அஸ்வின் அணியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விகள் எழுகிறது.

ஆவின் நிறுவனத்தில் 10 பேருக்கு பணி நியமனம் – முதல்வர் வழங்கல்!

ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சில் எந்த விக்கெட்டும் கிடைக்காத நிலையில், இங்கிலாந்து பேட்ஸ்மன்கள் அவரது சுழலில் தடுமாறியதாகவும் தெரியவில்லை. அதே நேரத்தில் பேட்டிங்கிலும் அவர் ரன்களை குவிக்கவில்லை. சொற்ப ரன்களிலே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதன் காரணமாக மற்றொரு ஆல்-ரவுண்டரான அஸ்வின் அணியில் இணைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இங்கிலாந்திற்கு எதிராக முந்தைய டெஸ்ட்களில் அஸ்வின் சிறப்பாகவே செயல்பட்டார் என்பதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் வெற்றி கூட்டணி என்பதால் அணியில் மரங்கள் நிகழுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த 3வது டெஸ்ட் போட்டி, வரும் ஆகஸ்ட் மாதம் 25 – 29 வரை நடைபெறவுள்ளது. லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.

ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவு – மாநில அரசு!

இந்திய அணி உத்தேச பட்டியல் :

கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், இஷாந்த் சர்மா/ ரவீந்திர ஜடேஜா (சூழ்நிலைகளை பொறுத்தது)

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!