IND vs ENG 3வது டெஸ்ட் – 432 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்! இந்திய பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டம்!

0
IND vs ENG 3வது டெஸ்ட் - 432 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்! இந்திய பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டம்!
IND vs ENG 3வது டெஸ்ட் - 432 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்! இந்திய பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டம்!

IND vs ENG 3வது டெஸ்ட் – 432 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்! இந்திய பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 432 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது.

IND vs ENG 3வது டெஸ்ட்:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகின்றன. முதலிரண்டு டெஸ்ட்களின் முடிவில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்களில் இமாலய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்திய அணி மாற்றமின்றி களமிறங்கியது.

2021 போட்டி அட்டவணையில் இருந்து விலகிய தங்க மகன் நீரஜ் சோப்ரா – இதுதான் காரணம்!

லீட்ச்சில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சிற்கு இறையாகினர். இந்திய அணியில் ரோஹித் 19 ரன்கள் மற்றும் ரஹானே 18 ரன்கள் ஆகிய இருவர் மட்டுமே இரட்டை இலக்கத்தை அடைந்தனர். மீதமுள்ளோர் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். அதில் கடந்த போட்டியில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய ராகுல், பும்ராஹ் மற்றும் ஷமி ஆகிய மூவரும் ரன்களின்றி டக் அவுட் ஆகியது குறிப்பிடத்தக்கது.

Tokyo 2020 Paralympic பளுதூக்குதல் – இந்திய வீராங்கனை சகினா கதுன் 5வது இடம்!

வேகத்தில் மிரட்டிய ஆண்டர்சன் மற்றும் ஓவெர்ட்டன் தலா 3 விக்கெட்டுகளும், ராபின்சன், சாம் குர்ரன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் இந்திய அணி 40.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இங்கிலாந்து அணி ரோரி பர்ன்ஸ் 61 ரன்கள், ஹசீப் ஹமீது 68 ரன்கள், கேப்டன் ஜோ ரூட் 121 ரன்கள் மற்றும் மலான் 70 ரன்கள் ஆகியோரின் ஆட்டத்தினால் 400 ரன்களை கடந்தது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி தற்போது 132.2 ஓவர்களில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது.

தற்போது 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸை துவக்கியுள்ளது இந்திய அணி. ரோஹித் (3) மற்றும் ராகுல் (2) களத்தில் உள்ளனர். இந்திய அணி தற்போது 4 ஓவர்களுக்கு 5 ரன்கள் எடுத்து உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!