IND vs ENG 2வது டெஸ்ட் – இந்திய அணி 346 ரன்களுக்கு 7 விக்கெட் இழப்பு! ரஹானே ஏமாற்றம்!

0
IND vs ENG 2வது டெஸ்ட் - இந்திய அணி 346 ரன்களுக்கு 7 விக்கெட் இழப்பு! ரஹானே ஏமாற்றம்!
IND vs ENG 2வது டெஸ்ட் - இந்திய அணி 346 ரன்களுக்கு 7 விக்கெட் இழப்பு! ரஹானே ஏமாற்றம்!
IND vs ENG 2வது டெஸ்ட் – இந்திய அணி 346 ரன்களுக்கு 7 விக்கெட் இழப்பு! ரஹானே ஏமாற்றம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் இந்திய அணி வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறி வருகிறது.

2வது டெஸ்ட் போட்டி:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முதலாவது போட்டியில் இந்தியா வெற்றி பெறும் நிலையில் இருக்கும் பொழுது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயேயான 2வது போட்டி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் ராகுல் களமிறங்கினர். இருவரும் நிதானமாகவும் நேர்த்தியாகவும் விளையாடி தொடக்க விக்கெட்டுக்கு 126 ரன்கள் குவித்தனர்.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் MBA முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய தொடக்க ஜோடியின் அதிகபட்சமாக இது பதிவானது. அபாரமாக ஆடிய இருவரில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் 83 ரன்களில் (145 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்ஸர்) ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ராகுல் சதமடித்து அசத்தினார். நல்ல நிலையில் இருந்த இந்திய அணி ராகுல் (127 ரன்கள், 250 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்ஸர்) மற்றும் விராட் கோஹ்லி (42 ரன்கள் 103 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்ஸர்) ஆகியோரின் வெளியேற்றத்திற்கு பிறகு தற்போது தடுமாறி வருகிறது.

WIPRO நிறுவன வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணி வாய்ப்புகள்!!

அடுத்தடுத்து களம் கண்ட புஜாரா (9 ரன்கள்), ரஹானே (1 ரன்) என சொற்ப ரன்னில் அவுட் ஆகிய பெவிலியன் திரும்பினர். சற்று ஆறுதல் அளித்த ரிஷாப் பண்ட 37 ரன்களில் (58 பந்து, 5பவுண்டரி) மார்க் வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த முஹம்மது சாமியும் (0) நீடிக்கவில்லை. தற்போது களத்தில் ரவீந்திர ஜடேஜா (31) மற்றும் இஷாந்த் சர்மா (0) உள்ளனர். 116 ஓவர்களில் முடிவில் இந்திய அணி 346 ரங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் தற்போது உணவு இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!