IND VS AUS WTC Finals: இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு
2021 – 2023ம் ஆண்டுகளுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்கள் பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள், இன்று நடக்கும் இறுதி போட்டியில் மோதிக்கொள்கின்றன.
ஜூன் 7 ம் தேதியான இன்று முதல் 11 ம் தேதி வரை இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இறுதி போட்டிகள் நடக்கின்றது. கடந்த முறை கோப்பையை தவற விட்ட இந்திய அணி இம்முறை எப்படியாவது வென்றாக வேண்டும் என்று தீவிர முயற்சி எடுக்கும். அதே போல், தொடரின் இறுதி போட்டியில் முதல்முறையாக களம் இறங்கும் ஆஸ்திரேலியா அணியும் பட்டம் வெல்ல கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ்:
தற்போது டாஸ் போடப்பட்டுள்ளது. அதில் வெற்றி பெற்ற ரோஹித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். அதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.