IND vs AUS: முதல் நாளில் 327 ரன்களை குவித்த ஆஸ்திரேலியா – ஈடு கொடுக்குமா இந்திய அணி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நேற்று துவங்கிய நிலையில், ஆஸ்திரேலிய அணி 327 ரன்களை குவித்துள்ளது.
முதல் நாள்:
2021 -2023 ஆண்டுகளுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்று, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நேற்று போட்டி துவங்கியது. டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் ஜூன் . 9ம் தேதி மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!
அதன்படி பேட்டிங்கில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய முதல் நாள் முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்களை குவித்தது. துவக்க வரிசை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதால் ஸ்கோர் நல்ல நிலையில் உள்ளது. ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் தற்போது களத்தில் உள்ளனர். மேலும், போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்றைய போட்டி நிறுத்தப்பட்டது.
Join Our WhatsApp
Group” for Latest Updates
இன்றைய 2ம் நாள் போட்டியில், இந்திய அணி விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தி விடும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளனர்.