தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டண உயர்வை தொடர்ந்து அதிகரித்த குடிநீர் வரி – பொதுமக்கள் அவதி!
தமிழகத்தில் குறிப்பாக சென்னை மாநகரில் சொத்து வரி, மின் கட்டண உயர்வை தொடர்ந்து தற்போது குடிநீர் வரியும் 7 சதவிகிதம் உயர்த்தப்பட இருப்பதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
குடிநீர் வரி:
நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி உயர்வு காரணமாக, மக்களின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பல நலத்திட்டங்களை கொடுத்தாலும் மறுபக்கம் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவை காரணமாக மக்கள் பெரும் வருத்தத்தில் இருக்கின்றனர். சென்னையில் உள்ள கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கு சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்டது.
இந்த சொத்து வரியானது பழைய பகுதிகளுக்கு அதிகமாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குறைவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சொத்து வரி உயர்வானது ஆண்டு மதிப்பு மற்றும் சொத்து அமைந்து உள்ள தெருவின் மதிப்பு அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சென்னை மக்கள் ஏப்ரல்-செப்டம்பர் மாதத்திற்கான சொத்துவரி இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை 12½ லட்சம் சொத்துவரி உரிமையாளர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் மாநில அளவிலான காலாண்டு தேர்வு ரத்து? அதிர்ச்சியில் மாணவர்கள்!
Exams Daily Mobile App Download
சொத்து வரி உயர்வை நினைத்து மக்கள் வருத்தத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது இந்த மாதத்தில் இருந்து புது மின்கட்டணம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் பாடு திண்டாடமாக இருக்கிறது. இந்நிலையில் சொத்து வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து குடிநீர் வரியும் உயர்த்தப்படுவது வழக்கமாகும். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 7.75 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் இருக்கின்றனர். அதனால் சொத்து வரி எந்த அளவிற்கு உயர்த்தப்பட்டதோ அதைவிட 7 சதவிகிதம் குடிநீர் வரி உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் வரி உயர்த்தப்படவில்லை. 2022-23 நடப்பு ஆண்டிற்கான முதல் அரையாண்டு குடிநீர் வரி மக்களிடம் தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.120 கோடி வருவாய் கூடுதலாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயர்த்தப்பட்ட குடிநீர் வரி குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் பொதுமக்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் இருக்கின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்