மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் 18 மாத DA நிலுவை? ஃபிட்மென்ட் காரணி 3.68 ஆக உயர்வு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் 18 மாத DA நிலுவை? ஃபிட்மென்ட் காரணி 3.68 ஆக உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் 18 மாத DA நிலுவை? ஃபிட்மென்ட் காரணி 3.68 ஆக உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் 18 மாத DA நிலுவை? ஃபிட்மென்ட் காரணி 3.68 ஆக உயர்வு!

மத்திய அரசுத்துறை ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களுக்கான அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை ஒரே தவணையில் கொடுக்கப்படலாம் என்றும் ஃபிட்மென்ட் காரணி 3.68 ஆக உயர்வை காணும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

DA நிலுவைத்தொகை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, வரும் நாட்களில் தனது ஊழியர்களுக்கு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஊடகங்களில் வரும் செய்திகளின்படி, மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணியை மோடி அரசாங்கம் உயர்த்தி அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தும்.

TN Job “FB  Group” Join Now

இதற்கு முன்னதாக குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயர்த்தவும், ஃபிட்மென்ட் காரணியை 2.57 மடங்கில் இருந்து 3.68 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் நீண்ட காலமாக அரசிற்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. இப்போது மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்படி மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணியை உயர்த்துவது குறித்து அரசு அறிவிப்புகளை வெளியிட்டால், அதன் விளைவாக அவர்களின் சம்பளம் உயரும்.

தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு (DA) நிறுத்தி வைப்பு – ஊழியர்கள் அதிர்ச்சி! வலுக்கும் கோரிக்கை!

உண்மையில், பொருத்துதல் காரணி அதிகரிப்புடன் குறைந்தபட்ச ஊதியமும் அதிகரிக்கும். இதுவரை மத்திய பணியாளர்கள் 2.57 சதவீதம் என்ற அடிப்படையில் ஃபிட்மென்ட் காரணியின் கீழ் சம்பளம் பெறுகின்றனர். இது 3.68 சதவீதமாக உயர்த்தப்பட்டால் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.8,000 ஆக உயரும். அதாவது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயர்த்தப்படும்.

அந்த வகையில் 7வது ஊதியக் குழுவின் கீழ் ஃபிட்மென்ட் காரணியை அரசு உயர்த்திய பிறகு மேற்கொள்ளப்படும் சம்பளக் கணக்கீடு விவரங்களை காணலாம். அதாவது, மத்திய அரசு ஃபிட்மென்ட் காரணியை 3.68% ஆக உயர்த்தினால் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.26,000 ஆக உயரும். தற்போது, குறைந்தபட்ச சம்பளம் ரூ. 18,000 என்றால், அலவன்ஸ்கள் தவிர்த்து, 2.57 ஃபிட்மென்ட் காரணியின்படி ரூ.46,260 (18,000 X 2.57 = 46,260) பெறுவார்கள். இப்போது, ஃபிட்மென்ட் காரணி 3.68 ஆக இருந்தால், சம்பளம் ரூ. 95,680 (26000X3.68 = 95,680) ஆக இருக்கும்.

CSK தோனி முதல் RCB விராட் கோஹ்லி வரை – ஐபிஎல் மெகா ஏலத்தில் கேப்டனை தேடும் 5 அணிகள்!

முன்னதாக மத்திய அமைச்சரவை கடந்த ஜூன் 2017 இல் சுமார் 34 மாற்றங்களுடன் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்தது. அதன் கீழ், தொடக்க நிலை அடிப்படை ஊதியத்திற்கு வழங்கப்படும் புதிய ஊதிய விகிதங்கள் மாதத்திற்கு ரூ.7,000லிருந்து ரூ.18,000 ஆகவும், உயர்நிலையில் அதாவது செயலர் பதவிகளுக்கு ரூ.90,000 லிருந்து ரூ.2.5 லட்சமாகவும் உயர்ந்தது. மேலும் வகுப்பு 1 அதிகாரிகளுக்கு, ஆரம்ப சம்பளம் ரூ.56,100 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here