தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு உயர்வு – அரசாணை வெளியீடு!

0
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு உயர்வு - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு உயர்வு - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு உயர்வு – அரசாணை வெளியீடு!

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித்தேர்வு மூலமாக நியமனம் செய்யப்படுகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு அதிகரித்து அரசாணை வெளியாகி உள்ளது.

வயது வரம்பு:

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பல அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலமாக நிரப்பப்படுகின்றன. மேலும் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் 100 சதவீதம் நேரடி நியமன முறையிலும், பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 50 சதவீதம் நேரடி நியமன முறையிலும் எஞ்சிய 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் நியமிக்கப்படுகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் வயது வரம்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன் படி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு வயது வரம்பு 40 என குறிப்பிட்டது. அதே போல இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு 45 என நிர்ணயம் செய்யப்பட்டது.

ஐபோன் மாடல் 14 பயனர்கள் அதிருப்தி – சிம் கார்டு பிரச்னை! ஆப்பிள் நிறுவனம் ஆய்வு!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பில் மாற்றம் செய்துள்ளதாக அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களில் பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 40லிருந்து 45 ஆகவும், மற்றவர்களுக்கு 45லிருந்து 50ஆகவும் உயர்த்தி இருப்பதாக வெளியான அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் ஆசிரியர் தகுதிதேர்விற்கு தயாராகி வருவோர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!