மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? ஜூலை முதல் அமல்! ஜாக்பாட் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? ஜூலை முதல் அமல்! ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? ஜூலை முதல் அமல்! ஜாக்பாட் அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? ஜூலை முதல் அமல்! ஜாக்பாட் அறிவிப்பு!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் மீண்டும் வருகிற ஜூலையில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அத்துடன் மீண்டும் அகவிலைப்படி உயர்வு இருந்தால் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் எவ்வளவு உயரும் என்று பார்ப்போம்.

அகவிலைப்படி

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனால் அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை சரி செய்ய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் கடந்த ஆண்டு 31% அகவிலைப்படியை பெற்று வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு தற்போது 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மேலும் பொதுவாக அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு இரு முறை வழங்கப்படும். அதன்படி தற்போது வருகிற ஜூலையில் அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளது. மேலும் அகவிலைப்படி உயர்வு AICP குறியீட்டு எண் வைத்து கணக்கிடப்படுகிறது. இதில் கடந்த ஜனவரியில் 125.1 ஆகவும், பிப்ரவரியில் 125 ஆகவும், மார்ச் மாதத்தில் 126 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி இனி வரும் மாதங்களுக்கான AICP குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி 4 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி அரசு ஊழியர்கள் 38% அகவிலைப்படியை பெறுவார்கள்.

இப்போது அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டால் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் எவ்வளவு உயரும் என்று பார்ப்போம். இப்போது ஊழியர் ஒருவர் ரூ.56,900 அடிப்படை சம்பளமாக பெறுகிறார் எனில் அவருக்கு 34% சதவீதத்தின்படி ரூ.19,346 அகவிலைப்படி கிடைக்கும். அதே போல் 38% சதவீத அகவிலைப்படி கணக்கீடு செய்தால் அந்த அவருக்கு ரூ 21,622 வரை அகவிலைப்படி தொகை கிடைக்கும். அதாவது மாதத்திற்கு ரூ.2,276 அகவிலைப்படி உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி இவருக்கு ஆண்டுக்கு ரூ.27,312 வரை மாத சம்பளத்தில் உயர்வு கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here