இந்தியாவில் சிறு வங்கிகளில் வழங்கப்படும் வட்டி விகிதத்தில் உயர்வு – முழு விவரம் இதோ!

0
இந்தியாவில் சிறு வங்கிகளில் வழங்கப்படும் வட்டி விகிதத்தில் உயர்வு - முழு விவரம் இதோ!
இந்தியாவில் சிறு வங்கிகளில் வழங்கப்படும் வட்டி விகிதத்தில் உயர்வு - முழு விவரம் இதோ!
இந்தியாவில் சிறு வங்கிகளில் வழங்கப்படும் வட்டி விகிதத்தில் உயர்வு – முழு விவரம் இதோ!

இந்தியாவில் செயல்பட்டு வரும் வங்கிகளில் பல்வேறு வகையான சேமிப்பு கணக்குகள் வழங்குகின்றன. அந்த வகையில் சில சிறு வங்கிகளில் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதமானது பெரிய வங்கிகளை காட்டிலும் அதிகமாக கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது

வட்டி விகிதம்:

  1. இந்திய அரசின் உதவியுடன் ரிசர்வ் வங்கியால் நிறுவப்பட்ட ஒரு புதிய வகை வங்கி தான் சிறு வங்கி. இந்த வங்கியில் அடிப்படை வங்கிச் சேவைகளை முதன்மையாக வழங்குவதன் மூலம் குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற குழுக்களுக்கு மட்டுமே நிதிச் சேவை வழங்கப்படுகின்றன. வழக்கமான வங்கிகளை போலவே இந்த வங்கியிலும் கடன் வழங்குதல், டெபாசிட்களை ஏற்றுக்கொள்வது போன்ற அனைத்து அடிப்படை சேவைகளும் இருக்கின்றன.
  2. இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மற்ற வங்கிகளை விட அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஈக்விடாஸ், AU வங்கி, உஜ்ஜீவன் வங்கி மற்றும் ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி போன்ற சிறு வங்கிகள் வழங்கும் சேமிப்புக் கணக்கிற்கான சமீபத்திய வட்டி விகிதம் பற்றி முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. அது பற்றி பார்க்கலாம்.
Exams Daily Mobile App Download

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்:

ஈக்விடாஸ் வங்கியில் சேமிப்பு கணக்கிற்கு 3.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையிலான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. கணக்கின் தினசரி இறுதி இருப்புத் தொகையைப் பயன்படுத்தி வட்டி கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடிக்கடன் மூலமாக கிடைக்கும் வட்டியை வைத்து, சேமிப்பு கணக்கிற்கான காலாண்டு வட்டி செலுத்தப்படுகிறது. இந்த வட்டி விகிதமானது கடைசியாக இருக்கும் தொகைக்கு ஏற்றார் போல மாறுபடும்.

இந்தியாவில் சிறு வங்கிகளில் வழங்கப்படும் வட்டி விகிதத்தில் உயர்வு – முழு விவரம் இதோ!

AU ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்:

இந்த வங்கியில் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி 3.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வழங்கப்படுகின்றன. இந்த வட்டி விகிதமானது இருப்பில் உள்ள தொகை அதிகரிப்பதற்கு ஏற்றார் போல் இருக்கும்.

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்:

சேமிப்புக் கணக்குகளின் மீதான வட்டி, சேமிப்புக் கணக்கில் வைக்கப்பட்டுள்ள நாள் முடிவுத் தொகையில் சேருகிறது மற்றும் காலாண்டுக்கு வட்டியானது ஒருமுறை விநியோகிக்கப்படுகிறது. இந்த வங்கியில் சேமிப்பு கணக்கில் இருப்பில் வைத்திருக்கும் தொகைக்கு ஏற்ப 3.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வழங்கப்படுகிறது.

ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்:

ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் சேமிப்பு கணக்கிற்கான வட்டியானது அக்கவுண்ட் உள்ள நாள் மற்றும் அதில் உள்ள கடைசி இருப்புத் தொகையை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்த வங்கியில் இருப்பு தொகை அதிகரிப்பதை பொறுத்து வட்டி விகிதமான 3.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறையும் வட்டி விகிதமானது, வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!