மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38% ஆக உயர்வு? – அரசின் விளக்கம்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38% ஆக உயர்வு? - அரசின் விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38% ஆக உயர்வு? - அரசின் விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38% ஆக உயர்வு? – அரசின் விளக்கம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த போலியான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், இது குறித்து மத்திய அரசு  அளித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு குறித்த அரசின் அறிவிப்பு வெளியாகும். தற்போது, மத்திய ஊழியர்களுக்கு 34 சதவீதம் டிஏ கிடைக்கிறது. 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்கள்  அரசின் அகவிலைப்படி  அறிவிப்பின் மூலம் பலனடைவார்கள். அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் படி அகவிலைப்படியானது நிர்ணயம் செய்யப்படுகிறது.  அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் பெருக்கி கணக்கிடப்படுகிறது. அகவிலைப்படியின் கணக்கீட்டின்படி, ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் பிறகு அரசு DA ஐ மாற்றிக்கொண்டே இருக்கிறது, இதன் விளைவாக பணவீக்கத்தை சமாளிக்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கிறது.

அனைத்து ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – சூப்பரான சேமிப்பு திட்டம்! முழு விவரம் இதோ!

தற்போது 2022ம் நிதியாண்டில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான, ஊழியர்களுக்கான அகவிலைப்படியாக தற்போது ஊழியர்கள் 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான மாதங்களுக்கு அகவிலைப்படி 38% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக பல செய்தி ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இதனை அரசு ஊழியர்கள் நம்பி விடும் சூழல் உள்ளது. இதனால் மத்திய அரசு இது குறித்து முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அந்த அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என பரவும் தகவல் பொய்யானது எனவும், இதுகுறித்து நிதியமைச்சகம் எந்த உத்தரவும் வெளியிடவில்லை எனவும் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான நடப்பு தவணைக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிக்கப்படும் என்றும், அது தீபாவளி போனசாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here