மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் அகவிலைப்படி (DA) உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் அகவிலைப்படி (DA) உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் அகவிலைப்படி (DA) உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் அகவிலைப்படி (DA) உயர்வு? ஜாக்பாட் அறிவிப்பு!

மத்திய அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வரும் ஜூலை மாத தவணைக்கான அகவிலைப்படி (DA) உயர்வு 6% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இப்போது அடுத்த தவணைக்கான அகவிலைப்படி (DA) மற்றும் DR உயர்வை எதிர்பார்த்துள்ளனர். அந்த வகையில் அடுத்த கட்ட DA திருத்தத்தின் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.40,000 வரை உயர்த்தப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது கடந்த முறை மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகை 34% ஆக உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்த அகவிலைப்படியை நிர்ணயிக்கும் AICPI தரவு எதிர்பார்த்ததை விட அதிகமாக உயர்ந்துள்ளதால் 5 சதவிகிதம் அல்லது 6 சதவிகிதம் வரை DA உயர்த்தப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் 6 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயரும். இப்போது அடுத்த தவணைக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஜூலை மாத இறுதியில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, சில ஊடக அறிக்கைகள் முன்னதாக ஜூலை 31ம் தேதி 6% அகவிலைப்படி அறிவிப்பு வெளியாகும் என்று கூறியது. ஆனால் சமீபத்தில் வெளிவந்துள்ள அறிக்கையின்படி, அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 3ம் தேதியன்று DA உயர்வு அறிவிக்கப்படலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

Reliance Jio நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவருக்கு வேலை – சம்பளம்: ரூ.25,000/-

இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டால், ரூ.56,900 அடிப்படை சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் இனி மாதத்திற்கு ரூ.3,414 வரை பெறலாம். தற்போது வரை 34 சதவீத மதிப்பீட்டில் மாதத்திற்கு ரூ.19,346 தொகையை அகவிலைப்படியாக பெறும் ஊழியர்களுக்கு 6% DA உயர்வால் ரூ.22,760 வரை கிடைக்கும். மேலும் மொத்த ஆண்டு சம்பள உயர்வு ரூ.40,968 என மாறும். அதே போல, ரூ.18,000 என்ற அடிப்படைச் சம்பளத்திற்கான டிஏ உயர்வு மாதத்திற்கு ரூ.1,080 ஆக அதிகரிக்கும். தொடர்ந்து 6% டிஏ தொகை அறிவிக்கப்பட்டால் மொத்த அதிகரிப்பு ஆண்டுக்கு ரூ.12,960 ஆக இருக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!