மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு , சம்பள உயர்வு? விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு , சம்பள உயர்வு? விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு , சம்பள உயர்வு? விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு , சம்பள உயர்வு? விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) 4 சதவீதம் உயர்த்தப்படும் என ஆர்வத்துடன் ஊழியர்கள் காத்திருக்கின்றனர். இந்த அகவிலைப்படி உயர்வால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு:

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது ஜனவரி- ஜூன், ஜூலை – டிசம்பர் என வருடந்தோறும் 2 முறை உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. அந்த அடிப்படையில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அகவிலைப்படி 34% சதவீதமாக உயர்ந்தது. இந்த நடவடிக்கையால் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் இந்த மாதத்தில் மீண்டும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் மிகுதியாக உள்ளதால் இம்முறை அகவிலைப்படி 4 சதவீதம் அல்லது 5 சதவீதம் அதிகரிக்கப்படலாம் என அரசு ஊழியர்கள் கூறுகின்றனர். மேலும் அகவிலைப்படி 5 % உயர்த்தப்பட்டால் DA எண்ணிக்கையானது தற்போதைய 34 சதவீதத்திலிருந்து 39 சதவீதம் ஆக உயரும். மேலும் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி போன்றே, மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களும் அவர்களின் அகவிலை நிவாரணத்தில் (DR) உயர்வை பெறுவார்கள்.

Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – 30 நாட்கள் செல்லுபடியாகும் சூப்பரான திட்டங்கள்!

அதுமட்டுமின்றி அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு, 38 சதவீதத்தை எட்டினால் அடிப்படை சம்பளமானது ரூபாய் 18,000 உள்ள ஊழியர்களுக்கு மாதம் ரூபாய் 720 (அல்லது) வருடத்திற்கு ரூபாய் 8,640 ஆக சம்பளம் உயர்த்தப்படும். அதன்பின் ரூபாய் 50,000 அடிப்படைச் சம்பளம் இருப்பவர்களுக்கு ரூபாய் 2,000 மாதாந்திர உயர்வை எதிர்பார்க்கலாம். இந்த DA அதிகரிப்பு 5 சதவீதம் ஆக இருப்பின், இந்தத் தொகையானது ரூபாய் 18,000 அடிப்படைச் சம்பளத்துக்கு மாதம் ரூபாய் 900 ஆகவோ (அல்லது) வருடத்திற்கு ரூபாய் 10,800 ஆகவோ மாறும். அத்துடன் ரூபாய் 50,000 அடிப்படை சம்பளத்திற்கு ரூபாய் 2,500 உயர்த்தி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!