ஜூலை 1 முதல் இரட்டிப்பு TDS அபராதம் – வருமான வரித்துறை தகவல்!

0
ஜூலை 1 முதல் இரட்டிப்பு TDS அபராதம் - வருமான வரித்துறை தகவல்!
ஜூலை 1 முதல் இரட்டிப்பு TDS அபராதம் - வருமான வரித்துறை தகவல்!
ஜூலை 1 முதல் இரட்டிப்பு TDS அபராதம் – வருமான வரித்துறை தகவல்!

வருமான வரி தாக்கல் செய்வதற்கு புதிய வருமான வரி இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டு, அது செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜூலை 1 முதல் வரி தாக்கல் செய்வதில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

வருமான வரி தளம்:

இந்தியாவில் வருமானவரி தாக்கல் செய்வதற்கு தற்போது சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி மத்திய பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அறிவிப்புகளின் படி, நிதியியல் கொள்கை 2021 ன் கீழ் முக்கிய வருமான வரி வரைமுறைகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக கடந்த 2 வருடத்தில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாமல் இருப்பவர்களுக்கு ஜூலை 1 முதல் TDS தொகையை இரு மடங்காக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் விளக்கம்!

இவ்வாறு இரட்டிப்பு TDS தொகை செலுத்துபவர்கள் கடந்த இரண்டு வருடமாக வருமான அறிக்கையை தாக்கல் செய்யாத பட்சத்தில், அவர்களின் TDS அளவு வருடத்திற்கு 50000 ரூபாய்க்கு அதிகமாக இருந்தால், வருமான வரித்துறை இரட்டிப்பு அளவீட்டை வசூலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு வரும் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படவுள்ளது. அதனால் இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாமல் இருப்பவர்கள் விரைந்து வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இல்லை என்றால் 50,000 TDS தொகைக்கு 1,00,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். இந்த இரட்டிப்பு வசூல் சம்பந்தப்பட்ட கொள்கைக்கு 2021 ல் சிறப்பு அனுமதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சிறப்பு அனுமதியின் கீழ் வருமான வரி தாக்கல் செய்யாதவர்களிடம், 3 முறையில் TDS தொகையை வசூலிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அல்லது இரட்டிப்பு TDS தொகை, இரட்டிப்பு வரி விகிதம் அல்லது 3.5 சதவீதம் வரி அளவு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகையில் பணம் வசூலிக்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

முன்னதாக கொரோனா தொற்று காரணமாக வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்பவர்ளுக்கு மத்திய நிதியமைச்சகம் குறிப்பிட்ட அளவு கால அவகாசம் கொடுத்திருந்தது. இந்த நிலையில் கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யாமல் இருப்பவர்கள் மீது இரட்டிப்பு TDS தொகையை அபராதமாக வசூலிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here