தமிழகத்தில் இளைஞர்களுக்கான புதிய திட்டம் – முக ஸ்டாலின் துவக்கி வைப்பு!

0
தமிழகத்தில் இளைஞர்களுக்கான புதிய திட்டம் - முக ஸ்டாலின் துவக்கி வைப்பு!
தமிழகத்தில் இளைஞர்களுக்கான புதிய திட்டம் - முக ஸ்டாலின் துவக்கி வைப்பு!
தமிழகத்தில் இளைஞர்களுக்கான புதிய திட்டம் – முக ஸ்டாலின் துவக்கி வைப்பு!

தமிழகத்தில் மாணவர்களின் நலன் மேம்பாட்டிற்காகவும் இளைஞர்களை ஊக்குவிக்க நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், இத்திட்டம் குறித்து பேசிய முதல்வர் முக ஸ்டாலின் இது என்னுடைய கனவு திட்டம் என்றும் கூறியுள்ளார்.

நான் முதல்வன் திட்டம்:

தமிழகத்தில் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நான் முதல்வன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். இதில் மாணவர்களின் சிறந்த திறமை கண்டறியபட்டு அதனை மேலும் வளர்க்கும் வகையிலும் ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் ஒரு மாணவர் தனது திறமையை அடையாளம் காண முடியும் என்கின்றனர். இத்திட்டத்தில் மாணவர்களுக்கு நல்ல கல்வியையும், நல்லொழுக்கத்தையும் கற்று தர வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக இருக்க வேண்டும் என்பதற்காக ‘நான் முதல்வன்’ திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு Coding, Robotics போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதற்கான பயிற்சிகள் அனைத்தும், தலைசிறந்த பயிற்சியாளர்களை கொண்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாபெரும் திறன் மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

வங்கி சேவைகள் முதல் பெட்ரோல் விலை வரை – செப்.1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் நான் மட்டும் முதல்வன் அல்ல அனைவரும் ஒவ்வொரு வகையிலும் முதல்வராக வர வேண்டும் என்று தெரிவித்தார்.மேலும் நான் முதல்வன் திட்டம் என்னுடைய கனவு திட்டமாகும். தமிழக மாணவர்கள் ஆங்கில பேச்சாற்றல் இல்லாததால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வேலைக்கு எண்ணத்தை மாணவர்கள் கைவிடுகின்றனர். அதனால் ஆங்கில புலமையை வளர்க்க கல்லூரி முதல் பருவத்திலேயே ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும். அத்துடன் மாணவர்கள் தமிழ், ஆங்கில நாளேடுகளை தினமும் படிக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!