தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,722 பேருக்கு தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

0
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,722 பேருக்கு தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,722 பேருக்கு தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,722 பேருக்கு தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை வெளியிட்டுள்ளது.

வீரியமாக பரவும் கொரோனா:

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் உச்சம் தொட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக சுகாதாரத்துறை மீண்டும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கையில் எடுத்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக மீண்டும் தடுப்பூசி முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 2,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று ஆண்கள் 1,495, பெண்கள் 1,227 என மொத்தம் 2,722 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Exams Daily Mobile App Download

இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 96,321 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து ,39,606 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 2,413 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 18,687 ஆக உள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்று பாதிப்பு 2,765 ஆகவும், சென்னையில் 1011 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் நாளை (ஜூலை 10) மெகா கொரோனா தடுப்பூசி முகாம் – சுகாதாரத்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,028 ஆக உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 939 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு 474, திருவள்ளூரில் 191 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 18,687 பேர் தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 31-வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here