
வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. தலைக்கவசம் அணியவில்லை என்றால் ரூ. 1000 அபராதம் – மாவட்ட காவல் துறை அதிரடி!
சாலை விபத்துகள் அதிகம் ஏற்படும் மாநிலமாக தமிழகம் உள்ள நிலையில் அதனை தடுக்க போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
போக்குவரத்துத்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சாலை விபத்துகளுக்கு போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடிக்காதது தான் முக்கிய காரணமாக உள்ளது. அதனால் தற்போது போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் புதிய மோட்டார் வாகன மசோதாவின் படி, தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழக நிதித்துறைக்கு புதிய வலைதளம் அறிமுகம் – முதலமைச்சர் தொடங்கி வைப்பு!
மேலும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மோட்டார் வாகன சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் மட்டுமில்லாமல், வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து 3 மணி நேரம் விழிப்புணர்வு வகுப்பு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.