தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டிய வெயில் – மக்கள் அவதி!

0
தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டிய வெயில் - மக்கள் அவதி!

தமிழகத்தில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் பதிவாகியுள்ளது.

வெயில்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் தீவிரம் காட்டி வரும் நிலையில் இனி வரும் மாதங்களில் வெயிலின் அளவு எவ்வளவு இருக்கும் என்ற அச்சம் எழும்பியுள்ளது.

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – உங்களுக்கான சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

நேற்று தேர்தல் நாளன்று தமிழகத்தில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் சுட்டெரித்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஈரோட்டில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இதுவே அதிகபட்ச வெயில். இதனை தொடர்ந்து வேலூர், கரூர் பரமத்தியில் தலா 107 டிகிரி, சேலம், திருச்சி, திருத்தணியில் தலா 106 டிகிரி, மதுரை நகரம், தருமபுரியில் தலா 106 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!