தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண் திட்டம்’ – முதல்வர் துவக்கி வைப்பு!

0
தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1000 வழங்கும் 'புதுமைப்பெண் திட்டம்' - முதல்வர் துவக்கி வைப்பு!
தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1000 வழங்கும் 'புதுமைப்பெண் திட்டம்' - முதல்வர் துவக்கி வைப்பு!
தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண் திட்டம்’ – முதல்வர் துவக்கி வைப்பு!

தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கான உதவித் தொகை வழங்கும் புதிய திட்டத்தை விரைவில் தொடங்க இருப்பதாக முன்னதாக அறிவித்திருந்தார். தற்போது அந்த திட்டத்திற்கான பெயர் தேர்வு செய்யப்பட்டு, தொடங்கப்படும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுமைப்பெண் திட்டம்:

தமிழகத்தில் பெண்களின் நலனிற்காக அரசு பல திட்டங்களை அமல் படுத்தி உள்ளது. அதே போல்,பெண்களின் திருமண சமயத்தில் அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதில், தாலிக்கு தங்கம் மற்றும் திருமணத்திற்காக குறிப்பிட்ட அளவு பணமும் அளிக்கப்பட்டது. தற்போது ஆட்சி பொறுப்பில் இருக்கும் திமுக அரசு இந்த திட்டத்தை தற்போது மாற்றி அமைத்துள்ளது. அதவாது பெண்களின் உயர் கல்விக்கு உதவியாக இருக்கும் வகையில் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து விட்டு தற்போது கல்லூரிகளில் உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக முன்னதாக மாணவிகளின் விவரங்கள் கல்லூரிகளில் சேகரிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டது. இந்த உதவித்தொகையானது நேரடியாக மாணவிகளின் வங்கி கணக்கிற்கு மாத, மாதம் அவர்கள் கல்வி பயிலும் வரை செலுத்தப்படும். இளங்கலை 2ம் ஆண்டு, 3ம் ஆண்டு மற்றும் முதுகலை பயிலும் மாணவிகளும் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால போனஸ் அறிவிப்பு – கேரள அரசின் ஜாக்பாட் திட்டம்!

தமிழகத்தில் விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, அரசுப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு ‘புதுமைப்பெண் திட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வரும் செப்டம்பர் 5ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும், இந்த விழாவின் சிறப்புஇ விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார். அவர், 15 மாதிரி பள்ளிகள் மற்றும் 28 சீர்மிகு பள்ளிகளை தொடங்கி வைக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here