தமிழகத்தில் ஆகஸ்ட் 20ம் தேதி ‘இந்த’ பகுதிகளில் மின்தடை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் ஆகஸ்ட் 20ம் தேதி 'இந்த' பகுதிகளில் மின்தடை - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் ஆகஸ்ட் 20ம் தேதி 'இந்த' பகுதிகளில் மின்தடை - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் ஆகஸ்ட் 20ம் தேதி ‘இந்த’ பகுதிகளில் மின்தடை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 20ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் சீரான மின் விநியோகத்திற்காக மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் தவறாது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் மூலம் பயனர்களுக்கு தடையில்லா மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. மின் பராமரிப்பு பணிகளின் போது மின்விநியோக பாதைகளுக்கு இடையூறாக உள்ளவைகளை கண்டறிந்து சரி செய்யப்படுகிறது. மேலும் மின் வயர்கள், கம்பிகள் போன்றவைகள் மாற்றம் செய்யப்படுகிறது.

இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பு செய்கின்றனர். இதனை அறிந்து மின் பயனர்கள் முன் கூட்டியே மின் சார்ந்த பணிகளை முடித்து விடுகின்றனர்.

ஆன்லைன் டாக்சி சேவை இன்று முதல் தொடக்கம் – “கேரளா சவாரி” செயலி!

மற்ற பகுதிகளை தொடர்ந்து ஆகஸ்ட் 20 தேதி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, பந்தல்குடி, வேலாயுதபுரம், பெரிய புளியம்பட்டி ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here