தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இருமடங்கு உயர்வு – அதிர்ச்சியில் பயணிகள்!

0
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இருமடங்கு உயர்வு - அதிர்ச்சியில் பயணிகள்!
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இருமடங்கு உயர்வு - அதிர்ச்சியில் பயணிகள்!
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இருமடங்கு உயர்வு – அதிர்ச்சியில் பயணிகள்!

தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தி தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் நாளை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகரித்துள்ளது. இதனை குறைக்க வேண்டும் என்று பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி

தமிழகம் முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அத்துடன் நாளை அரசு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு இன்று மாலையில் இருந்து செல்ல தொடங்குவார்கள். இந்த நிலையில் சென்னையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் நிரம்பியுள்ளது. அதனால் பொதுமக்களின் நலன் கருதி இன்று முதல் தமிழகத்தில் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்து கழகம் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆபத்தில் இருந்து தப்பிக்கும் ஜீவா, பயத்தில் குடும்பத்தினர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்!

அதன்படி சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, திருச்சி, ஓசூர், பெங்களூர், கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.800 என இருந்த கட்டணத்தை தற்போது ரூ.1,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் சென்னையில் இருந்து கோவைக்கு ரூ.1000 கட்டணம் மட்டுமே வசூலித்து வந்தது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தற்போது இந்த கட்டணம் ரூ.2500 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு ரூ. 1,400 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.2,500 ஆக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் சாமானிய மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் தனியார் ஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். அதனால் இது தொடர்பாக அரசு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!