பல மாவட்டங்களில் ஞாயிறுக்கு பதில் வெள்ளிக்கிழமை விடுமுறை? உத்தரகாண்ட் அரசு அதிரடி!

0
பல மாவட்டங்களில் ஞாயிறுக்கு பதில் வெள்ளிக்கிழமை விடுமுறை? உத்தரகாண்ட் அரசு அதிரடி!
பல மாவட்டங்களில் ஞாயிறுக்கு பதில் வெள்ளிக்கிழமை விடுமுறை? உத்தரகாண்ட் அரசு அதிரடி!
பல மாவட்டங்களில் ஞாயிறுக்கு பதில் வெள்ளிக்கிழமை விடுமுறை? உத்தரகாண்ட் அரசு அதிரடி!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜமத்ரா மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் விடுமுறை தினம் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமையாக மாற்றப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் மூலமாக தகவல் வந்துள்ளது. இது குறித்து மாநில கல்வித்துறை சம்மந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

விடுமுறை தினம்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையாக வசித்து வரும் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் விடுமுறை தினமானது ஞாயிற்று கிழமையில் இருந்து வெள்ளிக் கிழமையாக மாற்றப்பட்டுள்ளதாகவும், பள்ளிகளில் உருது மொழி சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகளில் காலை வந்ததும் மாணவ மாணவிகள் இறைவழிபாடு செய்யும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவ-மாணவிகள் இஸ்லாமிய மதத்தினர் பின்பற்றும் வழிபாட்டு முறையான கைகளை மடக்கி தலையை குணிந்து காலை இறைவழிபாடு செய்யும் முறை பின்பற்றப்பட்டு வருவதாகவும் தகவல்கள் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் மூலமாக வெளியே வந்துள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த மாற்றங்கள் அனைத்தும் மாநில அரசின் கவனத்திற்கு செல்லாமல் இருந்தது. இந்த மாற்றங்கள் உள்ளூர் அரசியல்வாதிகள், இஸ்லாமிய மத போதகர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோரின் அழுத்தத்தால் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாற்றமானது ஜமத்ரா மாவட்டம் மட்டுமல்லாமல் ராம்ஹரா, ஹர்வா, டும்கா, டியொஹர், கட்டா, கிரிடிஹா, பலமும்பு ஆகிய மாவட்டங்களில் அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து மாநில அரசு நடத்திய ஆய்வில் வார விடுமுறை ஞாயிறுக்கு பதில் இஸ்லாமிய மத மாணவ மாணவிகள் இறைவழிபாடு செய்ய ஏதுவாக வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Competitive தேர்வுகளுக்கு தயாராவோருக்கான அரிய வாய்ப்பு – நாளை (ஆக.07) மாதிரி தேர்வு!

மாநில கல்வித்துறையின் அனுமதி பெறாமல் 407 பள்ளிகளில் உருது மொழியும், 509 பள்ளிகளில் விடுமுறை நாள் ஞாயிறுக்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதனால் மாநில அரசு அனுமதியின்றி உருது மொழி சேர்க்கப்பட்ட 407 பள்ளிகளில் 307 பள்ளிகளில் உருது மொழி நீக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து வந்த 509 பள்ளிகளில் 459 பள்ளிகளில் மீண்டும் விடுமுறை தினம் ஞாயிற்றுக்கிழமையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் பள்ளிகளில் உரிய அனுமதியின்றி விடுமுறை நாள் மாற்றம், காலை இறைவழிபாடு முறை மாற்றம், உருது மொழி சேர்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்பட இந்த செயலில் தொடர்புடைய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here