IMPS பண பரிவர்த்தனை வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு – RBI அறிவிப்பு!

0
IMPS பண பரிவர்த்தனை வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு - RBI அறிவிப்பு!
IMPS பண பரிவர்த்தனை வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு - RBI அறிவிப்பு!
IMPS பண பரிவர்த்தனை வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு – RBI அறிவிப்பு!

இந்தியாவில் IMPS பண பரிவர்த்தனை முறையில் பண பரிமாற்ற வரம்பு 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்படும் என ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த் தாஸ் அறிவித்துள்ளார்.

பண பரிமாற்றம்:

இந்தியாவில் வங்கி சேவை என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. கடந்த மாதம் நிலவிய கொரோனா ஊரடங்கு காலத்திலும் வங்கிகள் மக்களின் தேவைக்காக பகுதி நேரமாக செயல்பட்டது. 50% வங்கி ஊழியர்கள் நோய் பரவும் அச்சத்திலும் பணி செய்தனர். மேலும் வங்கி சேவையை எளிமையாக்க ஆன்லைன் மூலம் பண பரிமாற்ற சேவைகளை வழங்கியது. சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் முடிந்தளவு வெளியில் செல்வதை தவிர்த்து ஆன்லைன் மூலம் வங்கி வேலைகளை முடிக்க அறிவுறுத்தியது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? HRA, DA உயர்வு எதிரொலி!

இணையதள வங்கி சேவைகளில் பணப் பரிவர்த்தனை செய்ய NEFT, IMPS, RTGS சேவைகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளனர். IMPS மற்றும் NEFT ஆகிய சேவைகளில் 24 மணிநேரமும் பணப் பரிமாற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இந்த ஆன்லைன் பண பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி தடை செய்தது. NEFT முறையில் ரூ.1 லட்சம் வரையிலும், ரூ. 1 லட்சத்துக்கு மேற்பட்ட மதிப்பு எனில் RTGS முறையில் பணம் அனுப்பலாம். சேமிப்பு கணக்குகளை பொறுத்தவரையில் IMPS முறையில், அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை பணம் அனுப்பலாம்.

அமைதிக்கான நோபல் பரிசு 2021 இருவருக்கு பகிர்ந்தளிப்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இணையதள வங்கி சேவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் IMPS பணப் பரிமாற்ற சேவையில் பணப் பரிமாற்ற வரம்பு 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்படும் என ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த் தாஸ் அறிவித்துள்ளார். மேலும் 2021- 22ம் நிதியாண்டில் GDP வளர்ச்சி 9.5 சதவீதத்தை அடையும் என்றும், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!