WhatsApp பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – போலி அப்டேட்!

0
WhatsApp பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை - போலி அப்டேட்!
WhatsApp பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை - போலி அப்டேட்!
WhatsApp பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – போலி அப்டேட்!

வாட்ஸ்அப் என்ற பெயரில் இணையத்தில் உலா வரும் சட்ட விரோதமான செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

வாட்ஸ்அப்  அப்டேட்

உலகம் முழுவதும் அதிகளவு மக்களால் பயன்படுத்தப்படும் முக்கியமான தகவல் தொடர்பு செயலி WhatsApp ஆகும். முகநூல் இணையத்திற்கு சொந்தமான இந்த வாட்ஸ்அப் செயலியானது குழுக்கள், சமூகங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல் தொடர்புக்கான முதன்மை ஆதாரமாக உள்ளது. இந்த வாட்ஸ்அப் செயலியானது பயனர்களின் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாப்பதில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சைபர் தாக்குதல்களில் இருந்து பயனர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வாட்ஸ்அப் அவ்வப்போது பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய அப்டேட்களை வெளியிடுகிறது.

Exams Daily Mobile App Download

அதாவது, வாட்ஸ்அப் பயனர்கள் ‘WhatsApp+’ மற்றும் ‘Hey WhatsApp’ என அசல் வாட்ஸ்அப் போல வடிமைக்கப்பட்ட செயலியை பதிவிறக்கம் செய்து இணைய மோசடிகளால் ஏமாற்றப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் அவை  தகவலைத் திருடக்கூடிய திறன் கொண்டது என்று வாட்ஸ்அப் எச்சரித்துள்ளது. இது போன்ற பயன்பாடுகளுக்கு எதிராக பயனர்களை எச்சரித்த வாட்ஸ்அப் தலைவர் வில் கேத்கார்ட், சட்டவிரோத செயலிகளை பயன்படுத்துவது எவ்வாறு தீங்கு விளைவிக்கும் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

TN TET தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ!

இது குறித்த பதிவு ஒன்றில் ‘சமீபத்தில் எங்கள் பாதுகாப்புக் குழு, “Hey WhatsApp” மற்றும்  “HeyMods” என்ற பெயரில் சில அப்டேட் இணையத்தில் வலம் வருவதை கண்டறிந்துள்ளது. அந்த வகையில் Google Play ஸ்டோருக்கு வெளியே வழங்கப்படும் இந்த பயன்பாடுகள் பயனர்களின் தகவல்களை திருடுகிறது. இந்த பயன்பாடுகள் புதிய அம்சங்களை பயனர்களுக்கு அளிக்கின்றன. ஆனால் தொலைபேசிகளில் சேமிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்கான நோக்கம் மட்டுமே இதற்கு உள்ளது. அதனால் தயவுசெய்து நம்பகமான ஆப் ஸ்டோர் அல்லது எங்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்திலிருந்து நேரடியாக  WhatsAppஐ பயன்படுத்தவும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!