தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய உத்தரவு – முதல்வர் உரை!

0
தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய உத்தரவு - முதல்வர் உரை!
தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய உத்தரவு - முதல்வர் உரை!
தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய உத்தரவு – முதல்வர் உரை!

தமிழகத்தில் இன்று முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய உத்தரவுகளை மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக் கவசம் கட்டாயம் அணிவது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

அதிரடி உத்தரவு:

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளாக மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த 2021 ஜனவரி மாதம் நமது மாநிலத்தில் தடுப்பூசிகள் செலுத்தக்கூடிய பணி தொடங்கியது. இதனால் உயிர் பலியாவது சற்று குறைந்தது. இதனால் தமிழக்த்தில் அமலில் இருந்த ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் கடந்த 1-ந்தேதி முதல் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் உருமாறி வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த ஒருவார காலமாக மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை ஐ.ஐ.டி.யில் 1,420 பேரை சோதனை செய்ததில் 60 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ExamsDaily Mobile App Download

இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 9 மணியளவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் உருமாறிய கொரோனா பரவலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர், டெல்லி மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு வாரமாக மீண்டும் உயரத்தொடங்கி இருக்கிறது.

தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ.49,000/- ஊதியத்தில் பணி வாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

நான் ஏற்கனவே பல முறை அறிவுறுத்தி இருக்கிற அடிப்படையில் அவற்றை கட்டுப்படுத்திட நம் வசம் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசியே ஆகும். தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் சிலருக்கு தொற்று ஏற்பட்டாலும் கூட உயிரிழப்பு ஏற்படுவது மிக குறைவு. எனவே தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்வதே நமது தேவையான கடமையாக இருந்துவிட வேண்டும். 2-வது தவணை தடுப்பூசி போடாதவர்கள் நமது மாநிலத்தில் 1.48 கோடி பேர் இருக்கிறார்கள். பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதி இருந்தும் அதனை போட்டு கொள்ளாதவர்கள் இன்னும் 11.6 லட்சம் பேர் இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் இனி வரும் வாரங்களில் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்வதே நம் முன்பு இருக்கக்கூடிய சவாலாக அமைந்திருக்கிறது. அடுத்து பெருந்தொற்றை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அனைத்தும் பெருமளவு குறைக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் பொது இடங்களிலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் அனைவரும் முகக் கவசம் அணிவதை நீங்கள் அனைவரும் உறுதி செய்திட வேண்டும். இதை மனதிலே நிறுத்தி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்து அரசு துறைகளும், மாவட்ட ஆட்சியர்களும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here