தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – கல்வி தொலைக்காட்சி!

0
தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு - கல்வி தொலைக்காட்சி!
தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு - கல்வி தொலைக்காட்சி!
தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – கல்வி தொலைக்காட்சி!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த முடியாத சூழல் உள்ளதால் கல்வி டிவி வாயிலாக கற்றல் பயிற்சிகளை மேற்கொள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

கற்றல் பயிற்சிகள்:

தமிழகத்தில் 2020-2021ம் கல்வியாண்டு முடிவடைந்து, 2021- 2022 க்கான புதிய கல்வியாண்டு ஜூன் 19ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் முதல் அலையின் காரணமாக கடந்த கல்வி ஆண்டு நேரடி முறையில் வகுப்பு நடைபெறவில்லை. தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையிலும், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி டிவி வாயிலாகவும் பாடங்கள் கற்பிக்கப்பட்டது.

தமிழகத்தில் சிஏஏ, வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் – முதல்வர் அறிவிப்பு!

இந்நிலையில், புதிய கல்வி ஆண்டிற்கான பாடங்களை மாவட்ட வாரியாக பிரித்து கல்வி டிவிக்கான வீடியோ பாடமாக தயாரிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டது. தற்போது தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, கல்வி டிவியில் ஒளிபரப்பும் பாடங்களின் அட்டவணையை அனைத்து மாணவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புகள் இல்லை.எனவே, கல்வி டிவி வாயிலாகவே மாணவர்களுக்கு கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வியாண்டுக்கான பாட புத்தகங்களை நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வழங்க வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!