சமூக வலைதள நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு – மத்திய அரசு அறிவுறுத்தல்!
இந்தியாவில் கடந்த மே மாதம் 2021, முதல் புதிய தகவல் மற்றும் தொழில்நுட்ப விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு சமூக வலைதள நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
சமூக வலைதளங்கள்:
தற்போதைய காலங்களில் நாட்டு மக்கள் மத்தியில் சமூக வலைதள பயன்பாடு பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நன்மைகள் ஏற்பட்டு வரும் அதே நேரத்தில் பல தீமையான செயல்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள், போலி தகவல் பரிமாற்றம் போன்ற குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்த இருப்பிடச் சான்று தேவையா? மத்திய அரசு விளக்கம்!
அந்த வகையில் சமூக வலைதள நிறுவனங்களுக்கு புதிய தகவல் மற்றும் தொழில்நுட்ப விதிகள் வகுக்கப்பட்டு கடந்த மே மாதம் முதல் அமலுக்கு கொண்டு வந்தது மத்திய அரசு. தொடக்கத்தில் இதற்கு ஒப்புதல் தெரிவிக்க அனைத்து வலைதள நிறுவனங்கள் தயக்கம் காட்டிய நிலையில், பின் புதிய விதிகளை பின்பற்ற ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் மத்திய அரசு சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக், ட்விட்டர், மற்றும் இன்ஸ்டா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதன்படி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் அரசியல், சினிமா பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் படத்துடன் போலி கணக்குகள் தொடங்கியிருப்பது குறித்த புகார் மீது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. முக்கிய பிரபலங்கள் புகைப்படத்தை DP ஆக வைத்து கணக்கு தொடங்கியிருப்பது குறித்து குறிப்பிட்ட நபர்கள் புகார் தெரிவித்தால் ஒரே நாளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.