TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் கடந்த 2021 ம் ஆண்டு குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. தற்போது இந்த தேர்வில் அதிகமாக பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.

2021 குரூப் 1 தேர்வு:

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தான் அரசு துறைகளுக்கான ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பதவிகளுக்கான நிலைகளை பொறுத்து தேர்வுகள் குரூப் வாரியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றது. அந்த வகையில், அரசு துறைகளில் துணை கலெக்டர் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கு குரூப் 1 தேர்வுகள் நடத்தப்படுகின்றது. கடந்த 2021ம் ஆண்டு இந்த பதவிகளில் 66 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டு, தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

குரூப் 1 தேர்வுகள் முதற்கட்ட தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்று மூன்று படிகளில் நடத்தப்படுகின்றது. அதன்படி, குரூப் 1 தேர்வுகளானது வரும் ஜனவரி 03 2021 அன்று நடைபெற்றது. முதல்நிலை தேர்வில் மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதில், இருந்து 3,800 பேர் மட்டும் அடுத்த கட்ட தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு, நடப்பாண்டில் மார்ச் மாதம் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. தேர்வின் முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இவர்களில் மொத்தம் 1,307 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழக அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – செப். 5 முதல் துவக்கம்!

இவர்களுக்கான நேர்காணல் ஜூலை 15ம் தேதி நடைபெற்று, அதன் முடிவுகள் அன்று மாலையே அறிவிக்கப்பட்டது. முடிவுகளின் படி, பணி நியமனம் பெற்றவர்களில் மொத்தம் 87% பேர் பெண்கள் தான். இதனால் தேர்வர்கள், பெண்களுக்கு மட்டும் அதிக அளவில் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது என்று புகார்களை எழுப்பினார்கள், இந்நிலையில், TNPSC தேர்வாணையம் தற்போது, குரூப் 1 தேர்விற்கான முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளில் தேர்வர்களின் மதிப்பெண்களை அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here