மத்திய அரசின் கீழ் பென்ஷன் பெறுபவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
மத்திய அரசின் கீழ் பென்ஷன் பெறுபவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மத்திய அரசின் கீழ் பென்ஷன் பெறுபவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மத்திய அரசின் கீழ் பென்ஷன் பெறுபவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

மத்திய அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் வயது மூப்பு அடையும் காலத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் அதிகரித்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான தகவல்களை இந்த பதில் காணலாம்.

பென்ஷன் திட்டம்:

இந்தியாவில் அரசாங்கத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்கள், அவர்களின் ஓய்வு காலத்தில் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் பென்ஷன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வயதான காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ இந்த பென்ஷன் திட்டம் பயன்படுகிறது. மத்திய அரசின் கீழ் அரசு வேலைகளில் பணியாற்றிய பிறகு மத்திய அரசு வழங்கும் பென்ஷன் வாங்கும் ஓய்வூதியதாரர் ஒரு குறிப்பிட்ட வயதை எட்ட எட்ட அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் அல்லது கருணை கொடுப்பனவு கணிசமாக அதிகரிக்கபடும்.

அதாவது, மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது 80, 85, 90, 95 மற்றும் 100 வயதுகளை எட்டியவுடன் அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும். இந்தியாவில் சென்ட்ரல் சிவில் சர்விஸ் விதிகளின்படி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சூப்பர் சீனியர் சிட்டிசன்களாக மாறிய பிறகு அதாவது 80 வயதை நிறைவு செய்த பிறகு, ஏற்கனவே வழங்கப்படும் ஓய்வூதியம் அல்லது கருணை கொடுப்பனவுடன் கூடுதல் ஓய்வூதியம் அல்லது கருணைக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களிடையே தீவிரமாக பரவி வரும் தக்காளி காய்ச்சல் – மருத்துவர்கள் எச்சரிக்கை!

மத்திய அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, சூப்பர் சீனியர் பென்ஷனர்களுக்கான கூடுதல் ஓய்வூதியம் 80 வயதிற்கு பிறகு ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அதிகரிக்கப்படும். அதன்படி,

1. 80 வயது முதல் 85 வயது வரை – அடிப்படை ஓய்வூதியம் அல்லது கருணை கொடுப்பனவில் 20%

2. 85 வயது முதல் 90 வயது வரை – அடிப்படை ஓய்வூதியம் அல்லது கருணை கொடுப்பனவில் 30%

3. 90 வயது முதல் 95 வயது வரை – அடிப்படை ஓய்வூதியம் அல்லது கருணை கொடுப்பனவில் 40%

4. 95 வயது முதல் 100 வயது வரை – அடிப்படை ஓய்வூதியம் அல்லது கருணை கொடுப்பனவில் 50%

5. 100 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் – அடிப்படை ஓய்வூதியம் அல்லது கருணை கொடுப்பனவில் 100% அதிகரிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் கடந்த 2003 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கும், பாதுகாப்பு சேவைகளில் உள்ள சிவில் அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். தற்போது அமலில் உள்ள இந்த விதிகள் ரயில்வே ஊழியர்கள், அனைத்திந்திய சேவைகளின் உறுப்பினர்கள், Contributory provident Fund-க்கு தகுதியுள்ள நபர்கள் உள்ளிட்ட சிலருக்கு பொருந்தாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!