TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் வெளியீடு!

0
TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வாணையம் வெளியீடு!
TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வாணையம் வெளியீடு!
TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்து அறநிலையத்துறையில் செயல் அலுவலர் பதவிக்கான கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பை TNPSC செயலாளர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார். இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.

TNPSC கலந்தாய்வு

தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணிகளில் தொகுதி 7 ‘ஏ’ பணியில் அடங்கிய செயல் அலுவலர் (கிரேடு1) பதவியில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC தேர்வாணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. இதனை தொடர்ந்து இப்பணிக்கான எழுத்து தேர்வு கடந்த ஏப்ரல் 23ம், 24ம் தேதி அன்று நடைபெற்றது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 18ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களின் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதையடுத்து தற்போது இப்பதவிக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை TNPSC செயலாளர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்து அறநிலையத்துறையில் செயல் அலுவலர் பதவிக்கான கலந்தாய்வு வருகிற 5ம் தேதி சென்னை தேர்வாணைய சாலையிலுள்ள உள்ள அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு – யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மேலும் கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்ய விரும்பும் தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கலந்தாய்விற்கு விண்ணப்பதாரர்கள் காலிப் பணியிடம், வகுப்பு, இன சுழற்சி ஆகியவற்றின் அடிப்படையில் அழைக்கப்படுவார்கள். அத்துடன் கலந்தாய்விற்கு வருபவர்களுக்கு உறுதியாக பணி நியமனம் வழங்கப்படும் என்பது உறுதியாக கூற இயலாது. அத்துடன் விண்ணப்பதாரர்கள் குறித்த நேரத்திற்கு வர தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!