TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – Hall Ticket வெளியீடு!

0
TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு - Hall Ticket வெளியீடு!
TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு - Hall Ticket வெளியீடு!
TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – Hall Ticket வெளியீடு!

தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணிக்கான எழுத்து தேர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தற்போது இந்த தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது.

ஹால் டிக்கெட்:

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தகுதித் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதாவது, அலுவலர் நிலை பதவியில் காலியாகவுள்ள 36 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி தேர்வு வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

மேலும், இந்த பணியிடங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விருப்பமும் தகுதியும் பெற்ற விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த பணியிடங்களுக்கு மதம் மற்றும் சமய நிறுவனங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

WhatsApp இனி அக்டோபரிலிருந்து செயல்படாது? அதிர்ச்சி தகவல் வெளியீடு!

மேலும், 01.07.2022 என்கிற தேதியின் அடிப்படையில் 25 வயது பூர்த்தியடைந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டன. மேலும், இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணிக்கான எழுத்துத்தேர்விற்கான ஹால் டிக்கெட் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, விண்ணப்பதாரர்கள் தங்களது பெயர் மற்றும் ரகசிய எண்ணை பதிவு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!